சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறினாலும் வங்கதேச அணியின் சேர்க்கப்படாத முஸ்தபிசுர் ரஹ்மான் – விவரம் இதோ

Rahman
- Advertisement -

வங்கதேச அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசுர் ரஹ்மான் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள ஒரு சில போட்டிகளைத் தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி குறிப்பிடும்படி சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் மே மாதம் 3-ஆம் தேதி துவங்க இருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக அவர் சிஎஸ்கே அணியிலிருந்து விலகி வங்கதேசம் சென்று தேசிய அணியில் இணைவார் என்று ஏற்கனவே அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

அந்த வகையில் தற்போது சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய முஸ்தபிசுர் ரஹ்மான் அடுத்து நடைபெறும் போட்டியுடன் நாடு திரும்புவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி இன்று அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக தற்போது சிஎஸ்கே அணியிலிருந்து அவர் வெளியேறி இருந்தாலும் தேசிய அணிக்காகவும் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஷாகிப் அல் ஹசன் கண் பிரச்சனை காரணமாக சமீபகாலமாகவே விளையாடாமல் இருக்கும் வேளையில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் மீண்டும் சிறப்பாக திரும்பும் வகையில் அவர் இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த ஐ.பி.எல் சீசனில் தமிழகத்தை சேர்ந்த அனுபவ வீரர் விற்கப்படாமல் போக கூட வாய்ப்பிருக்கு – சேவாக் வெளிப்படை

அதேவேளையில் முஸ்தபிசுர் ரஹ்மான் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருவதால் அவருக்கு ஓய்வளிக்கும் விதமாக அவரை அணியில் சேர்க்கவில்லை. இதன் காரணமாக அவர் மே 1-ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டி முடிந்து நாடு திரும்பினாலும் ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement