விராட் கோலி, துபே, ரிங்குவுக்கு இடமில்லை.. தனது 2024 டி20 உ.கோ இந்திய அணியை வெளியிட்ட மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar 4
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. அதில் தற்போதைய ஐபிஎல் 2024 தொடரில் நன்றாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த சூழ்நிலையில் சில முன்னாள் வீரர்கள் தங்களுடைய 15 பேர் கொண்ட இந்திய அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

அந்த வரிசையில் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தம்முடைய உலகக்கோப்பை அணியை தேர்வு செய்துள்ளார். ஆனால் அதில் சிஎஸ்கே அணியில் அபாரமாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் சிவம் துபேவை கண்டுகொள்ளாத அவர் ரிங்கு சிங்கையும் சேர்க்காமல் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். அதை விட நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலியையும் அவர் கழற்றி விட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.

- Advertisement -

மஞ்ரேக்கர் அணி:
தற்போதைய ஐபிஎல் தொடரில் விராட் கோலி நல்ல அனுபவத்தை கொண்டிருந்தாலும் கொஞ்சம் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். அதன் காரணமாக அவரை கழற்றி விட்டுள்ள மஞ்ரேக்கர் சஞ்சு சாம்சனை தேர்வு செய்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். ரோகித் சர்மா தலைமையிலான அவருடைய அணியில் ஜெய்ஸ்வால் 2வது துவக்க வீரராக தேர்வாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து விராட் கோலியின் இடத்தில் சஞ்சு சாம்சனும் 4வது இடத்தில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவும் இடம் பெற்றுள்ளனர். மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக ரிசப் பண்ட்டை தேர்ந்தெடுத்துள்ள அவர் கேஎல் ராகுலை பேக்-அப் வீரராக தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல சுழல் பந்து வீச்சு துறையில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சஹால், குல்தீப் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ள அவர் பேக்-அப் ஸ்பின்னராக க்ருனால் பாண்டியாவை இணைத்துள்ளார்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சுத் துறையில் பும்ரா, முகமது சிராஜுடன் 155 கிலோ மீட்டர் வேகத்தில் அசத்திய மயங் யாதவ் மற்றும் ஆவேஷ் கான், ஹர்ஷித் ராணா ஆகிய 3 இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் நட்சத்திர அந்தஸ்தை பற்றி பார்க்காமல் விராட் கோலி போன்ற முக்கிய வீரரை கழற்றி விட்டுள்ள சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வு செய்துள்ள 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணி பின்வருமாறு.

இதையும் படிங்க: 300 ரன்ஸ் அடிப்போம்ன்னு சொன்ன தம்பியா.. அதுக்கெல்லாம் அந்த திறமை வேணும்ப்பா.. ஹெட்டை கலாய்த்த கிப்ஸ்

ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், சூரியகுமார் யாதவ், ரிசப் பண்ட் (கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆவேஷ் கான், ஹர்ஷித் ராணா, மயங் யாதவ், க்ருனால் பாண்டியா

Advertisement