300 ரன்ஸ் அடிப்போம்ன்னு சொன்ன தம்பியா.. அதுக்கெல்லாம் அந்த திறமை வேணும்ப்பா.. ஹெட்டை கலாய்த்த கிப்ஸ்

Herschelle Gibbs
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 41வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, ரஜப் படிதார் 50 ரன்கள் எடுத்தனர்.

ஆனால் அதை சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு காட்டுத்தனமாக அடிக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் 1, அபிஷேக் சர்மா 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல மிடில் ஆர்டரில் வெறித்தனமாக அடிக்கக்கூடிய ஐடன் மார்க்கம் 7, ஹென்றிச் க்ளாஸென் 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

கலாய்த்த கிப்ஸ்:
அதனால் கடைசியில் சபாஷ் அகமது 40*, கேப்டன் கமின்ஸ் 31 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் ஹைதராபாத்தை 171/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களூரு 30 நாட்கள் கழித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2, கரண் சர்மா 2, ஸ்வப்னில் சிங் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த வருடம் எதிரணிகளுக்கு கருணை காட்டாமல் காட்டுதனமாக அடித்து வரும் ஹைதராபாத் அணி பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் குவித்தது.

அதனால் ஒரு பிரிமியர் லீக் டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக ஹைதெராபாத் உலக சாதனை படைத்தது. அந்த சூழ்நிலையில் இந்த வருடம் முடிவதற்குள் 300 ரன்களையும் அடிப்போம் என்று ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார். இது பற்றி அவர் பேசியிருந்தது பின்வருமாறு. “எங்களுடைய ஸ்கோருக்கு முன்பாக ஒரு 3 தேவைப்படுகிறது. அது இப்போதில்லையா?” என்று கலகலப்பாக தெரிவித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் அதே ஆர்சிபி அணிக்கு எதிராக இப்போட்டியில் சவாலான பிட்ச்சில் தடுமாறிய ஹைதராபாத் அணி 200+ ரன்களை சேசிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்த வருடம் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஹைதராபாத் அணி தோல்வியையும் சந்தித்தது. இந்நிலையில் ஃபிளாட்டான பிட்ச்சில் எவ்வளவு ரன்கள் வேண்டுமானாலும் அடிக்கலாம் நொறுக்கலாம்.

இதையும் படிங்க: டி20 உ.கோ தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க தகுதியானவர் அவர்தான். ரோஹித் இல்லை – பட்டாச்சார்யா கருத்து

ஆனால் ஸ்லோவான பிட்ச்சில் சேசிங்கில் 200 ரன்கள் அடிப்பதற்கே தனி திறமை வேண்டும் என்று டிராவிஸ் ஹெட்டை முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹர்ஷல் கிப்ஸ் கலாய்த்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டிராவிஸ் ஹெட் 300 ரன்களை அடிக்க விரும்புகிறார் என்பது எனக்கு தெரியும். ஆனால் ஸ்லோயர் பிட்ச்சில் 207 ரன்களை சேசிங் செய்வது அவ்வளவு திறமையானதாக இருந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.

Advertisement