சுனில் நரேனை வெச்சு தான் பிளான் போட்டேன்.. 100 டெஸ்டில் ஆடிய பேர்ஸ்டோ கைத்தட்டுனாரு.. சசாங் பேட்டி

Shashank Singh
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் 3வது வெற்றியை பதிவு செய்தது. ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுனில் நரேன் 71, பில் சால்ட் 75 ரன்கள் எடுத்த உதவியுடன் 261/6 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 54, ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 108*, ரிலீ ரோசவ் 26, சசாங் சிங் 68* ரன்கள் அடித்து 18.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதன் வாயிலாக ஐபிஎல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பஞ்சாப் படைத்தது.

- Advertisement -

பஞ்சாப் நாயகன் சசாங்:
அத்துடன் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்த வருடம் பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வரும் சசாங் சிங் இப்போட்டியில் முக்கியமான நேரத்தில் வந்து 2 பவுண்டரி 8 சிக்ஸருடன் 68* (28) ரன்கள் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

இந்நிலையில் தரமான சுனில் நரேனுக்கு எதிராக அடிக்கக்கூடாது என்று முடிவெடுத்ததாக தெரிவிக்கும் அவர் மற்ற பவுலர்களை வெளுத்து வாங்கியதாக கூறியுள்ளார். அத்துடன் இங்கிலாந்துக்காக 100 போட்டிகளில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோ போன்றவர் தம்மை பாராட்டியது புத்துணர்ச்சியை கொடுத்ததாகவும் தெரிவிக்கும் சசாங் சிங் இப்போதும் பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெவிலியனில் இருக்கும் போது பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை பார்த்தேன். அதில் நல்ல உயரத்துடன் பந்து வருவதாக உணர்ந்தேன். சுனில் நரேனுக்கு எதிராக நாங்கள் சிங்கிள், டபுள் ரன்கள் மட்டும் எடுத்ததில் மகிழ்ச்சி. அதற்கு பதிலாக மற்ற பவுலர்களை அடிக்க முயற்சித்தேன். பயிற்சியாளர் ட்ரேவர் பெய்லிஸ் எனக்கு நான் விரும்பும் வழியில் விளையாடுமாறு முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளார்”

இதையும் படிங்க: `சசாங் ஸ்பெஷல் பிளேயர்.. சுனில் நரேனை பாத்து அதை தெரிஞ்சுக்கிட்டோம்.. ஆட்டநாயகன் பேர்ஸ்டோ பேட்டி

“எதிர்ப்புறம் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை கொண்ட ஜானி பேர்ஸ்டோ போன்றவர் உங்களுக்கு கை தட்டினால் அது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இன்னும் எங்களுக்கு 5 போட்டிகள் இருக்கிறது. எனவே இப்போதும் எங்களால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement