இந்த ஐ.பி.எல் தொடரில் தோனி கடைசியில் களமிறங்க காரணம் என்ன? – சி.எஸ்.கே கொடுத்த விளக்கம்

Dhoni
- Advertisement -

சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 42 வயதை எட்டியுள்ள மகேந்திர சிங் தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதனால் இந்த தொடரில் அவர் விளையாடும் போட்டிகளை காண ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

அதோடு சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்றும் மைதானத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் ஆதரவினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தோனி இந்த ஐபிஎல் தொடரில் சற்று முன்கூட்டியே வந்து பேட்டிங் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனாலும் நடைபெற்று முடிந்துள்ள 11 போட்டிகளிலும் தோனி பின் வரிசையில் களமிறங்கி கடைசி ஒரு சில ஓவர்களை மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்த வேளையிலும் அந்த போட்டியில் தோனி ஒன்பதாவது வீரராக களமிறங்கியது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

அதோடு முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான தோனி முன்கூட்டியே களமிறங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் தோனி பின்வரிசையில் இறங்குவது குறித்தும் ஒரு சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்வது குறித்தும் சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தரப்பிலிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஆண்டு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி இந்த ஆண்டு அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து விளையாடி வந்தாலும் இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அவர் ஆபரேஷன் செய்த அதே இடத்தில் தசைநார் கிழவி ஏற்பட்டுள்ளதால் அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வருகிறார் என்றும் அவர் சிங்கிள் ஓடாததற்கு காரணமும் அந்த காயம் தான் என்றும் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சமாதானமா போங்க.. கவாஸ்கர் பற்றி விராட் கோலி அப்படி சொல்லிருக்கக் கூடாது.. வாசிம் அக்ரம் கருத்து

அதோடு 20 ஓவர்கள் முழுவதுமாக கீப்பிங் செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர் பேட்டிங்கில் தாமதமாக வருவதாகவும் ஏற்கனவே உள்ள காயம் அதிகரிக்க கூடாது என்பதற்காகவும் அவர் தனது பேட்டிங் வரிசையை பின்னோக்கி வைத்துள்ளார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement