கவலைப்படாதீங்க டி20 உலகக் கோப்பையில் அவர் சரியான நேரத்தில் ஃபார்முக்கு வந்துடுவாரு.. கிளார்க் நம்பிக்கை

Micheal Clarke
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணி 11 போட்டிகளில் 4 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை மும்பை இழந்தது அந்த அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. மும்பை அணியின் இந்த தோல்விக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.

அதே போல முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவும் முதல் 7 போட்டிகளில் 298 ரன்கள் அடித்து அசத்தினார். அதன் பின் தடுமாறும் அவர் கடைசி 4 போட்டிகளில் வெறும் 32 ரன்கள் மட்டுமே அடித்து சுமாராக செயல்பட்டு வருகிறார். இத்தனைக்கும் இந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பு இல்லாமல் சாதாரண வீரராக விளையாடும் ரோகித் சர்மா சுதந்திரமாக அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஃபார்முக்கு வந்துடுவாரு:
ஆனால் ஆரம்பத்தில் அசத்திய அவர் 2024 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வருவது இந்திய ரசிகர்களுக்கு கவலையை கொடுக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக விளையாடுவது ரோகித் சர்மா தடுமறுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். எனவே டி20 உலகக் கோப்பையில் தக்க சமயத்தில் ரோஹித் ஃபார்முக்கு திரும்பி விடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் அடித்த பந்து சிக்ஸருக்கு செல்லும் என்று எத்தனை முறை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? ஏனெனில் கிட்டத்தட்ட அதே பந்தில் தான் ரோஹித் சர்மா அவுட்டானார். என்னுடைய பார்வையில் அவர் கொஞ்சம் சோர்வாக இருக்கலாம். எனவே ஒரு சிறிய இடைவெளி எடுத்து புத்துணர்ச்சியுடன் விளையாடினால் அது அவருக்கு அற்புதங்களை செய்யக்கூடும்”

- Advertisement -

“ஆனால் இந்தியா மற்றும் மும்பை அணியின் முக்கிய வீரராக இருக்கும் அவருக்கு ஓய்வு கிடைக்காது. எனவே அவர் ஃபார்மை கண்டுபிடிக்க வேண்டும். கடந்த போட்டியில் முதுகு வலியுடன் அவர் பயிற்சி செய்வதை பார்த்தேன். இருப்பினும் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பது நல்ல அறிகுறியாகும். அவர் தன்னுடைய டைமிங்கில் தடுமாறுவது போல தெரியவில்லை. எனவே ரோஹித் சர்மா போன்றவர் ஃபார்முக்கு திரும்புவதற்கு அதிக நேரம் பிடிக்காது”

இதையும் படிங்க: இந்த ஐ.பி.எல் தொடரில் தோனி கடைசியில் களமிறங்க காரணம் என்ன? – சி.எஸ்.கே கொடுத்த விளக்கம்

“அவர் மிகவும் திறமையானவர் என்பதால் தமக்கு குறைவான அழுத்தத்தை கொடுத்து தனது விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். பந்தை அதிகமாக அதிக முயற்சிப்பதை விட டைமிங் கொடுக்கும் போது தான் ரோகித் சர்மா சிறந்தவராக செயல்படுவார். எனவே அவர் விரைவில் ஃபார்முக்கு திரும்புவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திரும்பக் கூடாது என்று நம்புவோம்” எனக் கூறினார்.

Advertisement