இனிமேல் கோப்பை ஜெயிப்பதை நிறுத்த முடியாது.. ஆர்சிபி’யுடன் ஃபைனலில் மோதப்போகும் அணி பற்றி ஹர்பஜன் 

Harbhajan Singh 14
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதனுடைய முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து 1 மாதமாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் கண்டிப்பாக முதல் அணியாக பெங்களூரு லீக் சுற்றுடன் நடையை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த அந்த அணி கடைசி 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றது.

குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த வகையில் வரலாற்றின் மாஸ் கம்பேக் கொடுத்துள்ளதால் இம்முறை நிச்சயமாக கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- Advertisement -

ஹர்பஜன் கணிப்பு:
சொல்லப்போனால் இந்த வருடம் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரில் வலுவான மும்பையை தோற்கடித்த ஆர்சிபி ஸ்மிருதி மந்தனா தலைமையில் கோப்பையை வென்றது. அதே போல இம்முறை வலுவான சென்னையை நாக் அவுட் செய்துள்ளதால் கண்டிப்பாக பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்ற ஆழமான நம்பிக்கை ஆர்சிபி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மாபெரும் எழுச்சி கண்டுள்ள பெங்களூரு அணி இதே போல பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் பட்சத்தில் கோப்பை வெல்வதை யாராலும் தடுக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் கௌதம் கம்பீர் ஆலோசகராக இருக்கும் கொல்கத்தா அணியை மாபெரும் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி எதிர்கொள்ளும் என்றும் ஹர்பஜன் கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் ஃபைனலில் விளையாடும் என்று நான் கருதுகிறேன். அது நடந்தால் விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வார்கள். இங்கிருந்து இதே போல ஒவ்வொரு போட்டியிலும் கடினமாக போராடினால் கண்டிப்பாக ஆர்சிபி கோப்பையை வெல்லும். இதே போன்ற எனர்ஜியுடன் விளையாடினால் அவர்களை மற்ற அணிகள் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஆர்சிபி வெற்றிக்கு அவர் தான் முக்கிய காரணம்.. கண்டிப்பாக கோப்பை ஜெயிப்பாங்க.. ராயுடு பாராட்டு

இந்த நிலையில் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதால் குவாலிபயர் 1 போட்டியில் வெல்லும் பட்சத்தில் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெறும். மறுபுறம் 4வது இடத்தை பிடித்துள்ள பெங்களூரு எலிமினேட்டர் போட்டியில் விளையாட உள்ளது. எனவே அதில் வென்று குவாலிபயர் 2 போட்டியிலும் ஆர் சிபி வெல்லும் பட்சத்தில் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement