42 வயதிலும் தோனிதான் மிகவும் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.. காரணத்தை கூறிய – லட்சுமிபதி பாலாஜி

Balaji
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 17-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு படு சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரே சி.எஸ்.கே அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று பேசப்பட்டு வருவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு சி.எஸ்.கே அணிக்கு ஆதரவும் பெருகி வருகிறது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் துவங்கும் முன்னரே கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய தல தோனி தற்போது முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு தனது காரியரின் ஆரம்ப கட்டத்தில் அவர் எவ்வாறு விளையாடுவாரோ அதேபோன்று இந்த ஆண்டு அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் இறுதி சில பந்துகள் ரசிகர்களின் ஆசைக்காக களமிறங்கும் தோனி அப்படி தனக்கு கிடைக்கும் ஒருசில பந்துகளிலும் பவுண்டரி, சிக்ஸர் என அதிரடியில் வெளுத்து வாங்கி வருகிறார். இந்த சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 260 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 91 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் குழுவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் முன்னாள் இந்திய வீரரான லட்சுமிபதி பாலாஜி : இன்றளவும் கிரிக்கெட்டில் அபாயகரமான மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேன் என்றால் அது தோனி தான் என்று பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஆண்டு வலைப்பயிற்சிக்கு முன்பு வரை இந்த இடைப்பட்ட மாதங்களில் தோனி கையில் பேட்டை தொட்டு கூட பார்க்கவில்லை. இடையில் வேறு எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை. இருப்பினும் நடப்பு ஐ.பி.எல் தொடருக்கு சில வாரங்கள் முன்னதாக தன்னை தயார் செய்து கொண்டார்.

இதையும் படிங்க : சுனில் நரேனை வெச்சு தான் பிளான் போட்டேன்.. 100 டெஸ்டில் ஆடிய பேர்ஸ்டோ கைத்தட்டுனாரு.. சசாங் பேட்டி

அவர் நீண்ட நேரம் அணியுடன் இணைந்து பயிற்சி செய்கிறார். அதிலும் குறிப்பாக அதிரடியாக ஷாட் அடிப்பதே அவருடைய பயிற்சியாகவும் உள்ளது.கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிரடியாக செயல்பட்டு வருகிறார். என்னை பொறுத்தவரை இன்றளவும் தோனி தான் மிகவும் சக்தி வாய்ந்த வீரர் என்று கூறுவேன். வேறுயெந்த பேட்ஸ்மேனும் அவரின் அருகில் கூட நெருங்க முடியாது என பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement