தோனி, ருதுராஜ் பத்தி நான் தப்பா சொன்னேனா.. யாருங்க நீங்க எல்லாம் – கொந்தளித்த அம்பத்தி ராயுடு

Rayudu
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முக்கியமான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 210 ரன்கள் குவித்தும் அந்த இலக்கினை வைத்து சுருட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தது. அதோடு ஏற்கனவே அந்த அணியிடம் தோற்றிருந்த சென்னை 2 ஆவது முறையாகவும் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி தோல்வியை சந்திக்க காரணம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் சில தவறான முடிவுகள் தான் காரணம் என்று பலரும் கூறியிருந்தனர். அதேவேளையில் சென்னை பெற்ற இந்த தோல்விக்கு தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தான் காரணம் என முன்னாள் வீரர் நவஜோத் சிங் சித்து கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் சென்னை அணி வெற்றிபெறும் போது அதற்கு காரணம் தோனிதான் என்று கூறும்போது, சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும் அதற்கு காரணம் தோனி தான் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அப்படி நவஜோத் சிங் சித்து கூறிய கருத்துக்களை முன்னாள் சி.எஸ்.கே வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்ததாக சில பொய்யான வதந்திகள் சமூக வலைதளத்தில் பரவின. அதனை கண்ட ரசிகர்கள் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டை எவ்வாறு மோசமாக பேசலாம் என ராயுடுவின் மீது அதிருப்தி அடைந்தனர். அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த விவாதம் பரபரப்பாக மாறியது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது அம்பத்தி ராயுடு விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் லக்னோ அணிக்கெதிரான போட்டி நடைபெற்ற போது வர்ணனை செய்யவே இல்லை. என்னுடைய பண்ணை தோப்பில் மாம்பழங்களை பறித்து கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க : 42 வயதிலும் தோனிதான் மிகவும் சக்தி வாய்ந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.. காரணத்தை கூறிய – லட்சுமிபதி பாலாஜி

அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களை பற்றி தவறாக பேசியிருக்க முடியும். முதலில் இதுபோன்ற தவறான செய்திகளை பகிரும் முன்னர் பத்திரிக்கையாளர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.. மேலும் இதுபோன்ற முட்டாள் தனமான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அம்பத்தி ராயுடு இந்த விவாகரத்திற்கு கோபத்துடன் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement