- Advertisement -
ஐ.பி.எல்

வருஷா வருஷம் இதே வேலையா போச்சு.. வேறு வழியே இல்லாமல் கடமைக்கு கை தூக்கிய – மும்பை இந்தியன்ஸ்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்கள் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது கோவா அணிக்காக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். 25 வயதை எட்டியுள்ள அவர் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய வீரராக வரவேண்டும் என்று போராடிவரும் வேளையில் இன்றளவும் அவரால் போதிய அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

கடைமைக்கு வாங்கப்பட்ட ஜாம்பவானின் மகன் :

அவ்வப்போது ஒரு சில போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அவர் மற்றபடி கவனத்தை ஈர்க்க தவறி வருகிறார். ஆனாலும் கடந்த நான்கு ஆண்டுகளாகவே அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார்.

- Advertisement -

ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த அணிக்கு மிகப்பெரிய அடையாளமாக பார்க்கப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர் தற்போதும் அவர் அந்த அணியுடன் மென்டராக பயணித்து வரும் வேளையில் அவர் இருக்கும் போது அர்ஜுன் டெண்டுல்கரை எடுக்காமல் விட்டால் அது கடுமையாக விமர்சனங்களை சந்திக்கும் என்பதனால் அர்ஜுன் டெண்டுல்கரை அந்த அணி வாங்கி வருகிறது.

ஆனால் இப்படி அர்ஜுன் டெண்டுல்கரை அவர்கள் தொடர்ந்து வாங்கி வருவதும் சச்சின் ஒருவருக்காக தான் என்ற கேலி தற்போது அனைவரது மத்தியில் எழுந்துள்ளது, ஏனெனில் சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஐபிஎல் ஏலமானது நேற்று முடிவுக்கு வந்த வேளையில் இந்த ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ஏலத்தில் விடப்பட்டார்.

- Advertisement -

அப்படி ஏலத்திற்கு வந்த அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு கூட மற்ற எந்த அணிகளும் கேட்க முன்வரவில்லை. இதன் காரணமாக மீண்டும் ஒருமுறை மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியாக அவரை அடிப்படை விலைக்கு தேர்வு செய்து தங்களது அணியில் இணைத்தது. இப்படி கடமைக்காக ஒரு வீரரை தொடர்ச்சியாக மும்பை அணி வாங்கி வருவது வெளிப்படையாக இதன்மூலம் தெரிகிறது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் ஏலத்தின் மேடைக்கு கூட வராமல் போன ஜேம்ஸ் ஆண்டர்சனின் பெயர் – என்ன காரணம் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐந்து ஆண்டுகளாக அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பிடித்து வந்தாலும் இதுவரை அவருக்கு ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளதால் இந்த சீசனிலும் நிச்சயம் அவர் வெளியில் தான் அமர வைக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -