சி.எஸ்.கே அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் ரசல் ஏன் விளையாடவில்லை – மெக்கல்லம் கொடுத்த விளக்கம்

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியானது பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 192 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாட தொடங்கியது.

KKRvsCSK

- Advertisement -

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவித்த கொல்கத்தா அணியானது எளிதில் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11-வது ஓவரின் போது 91 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த கொல்கத்தா அணியானது அதே ஓவரின் கடைசி பந்தில் இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது.

பின்னர் மிடில் ஆர்டரில் வழக்கம் போல் சொதப்பல் ஏற்படவே அடுத்த 34 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. அதாவது 90 ரன்களில் விக்கெட்டை இழக்காமல் இருந்த கொல்கத்தா அணியானது 125 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. பின்னர் இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 165 ரன்களை மட்டுமே குவித்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Thakur

இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரசல் இருந்திருந்தால் நிச்சயம் அந்த அணி வெற்றி பெற்று இருக்கும் என்பதே பலரது கருத்தாக உள்ளது. இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் ரசல் ஏன் விளையாடவில்லை ? என்பது குறித்து கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

russell

ரசலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாகவே இறுதிப்போட்டியில் விளையாடவில்லை. முக்கியமான இந்த போட்டியில் விளையாடுவதற்கு அவர் தகுதியுடன் இருந்தாலும் அவரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைத்தோம். அதோடு அவர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டிய அவசியமும் அவருக்கு உள்ளது.

இதையும் படிங்க : அவர் ஒருவருக்காக கோப்பையை ஜெயிக்க நெனச்சோம். இறுதியில் ஜெயிச்சது ஹேப்பி – தீபக் சாஹர் ஓபன்டாக்

அதே வேளையில் கடைசி சில போட்டிகளாக கொல்கத்தா சிறந்த காம்பினேஷன் உடன் சிறப்பான வெற்றிகளை பெற்று வந்ததால் அணியை மாற்ற வேண்டாம் என்றும் நாங்கள் நினைத்து ரசலை விளையாட வைக்கவில்லை என மெக்கல்லம் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement