டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேற மிட்சல் மார்ஷ்க்கு பதிலாக ஒப்பந்தமான ஆப்கானிஸ்தான் வீரர் – யார் தெரியுமா?

Marsh
- Advertisement -

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடி உள்ள ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றி மற்றும் ஐந்து தோல்வி என 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தினை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கு மீண்டும் திரும்பியுள்ள பண்ட் தலைமையில் டெல்லி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து இன்னும் சில வெற்றிகளை டெல்லி கேபிட்டல்ஸ் அணி பெறும் பட்சத்தில் பிளேஆப் சுற்றினை நோக்கி முன்னேறும் வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாகியுள்ளது. அதோடு தற்போதுள்ள பார்முக்கு நிச்சயம் டெல்லி அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரின் ஆரம்பத்தில் அடுத்த தோல்விகளை சந்தித்து சறுக்கிய டெல்லி கேபிட்டல்ஸ் தற்போது தோல்வி பிடியிலிருந்து மீண்டு வெற்றிகளை படிப்படியாக பெற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த மிட்சல் மார்ஷ்க்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் நடப்பு ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் சில போட்டிகளில் விளையாடியிருந்த வேளையில் காயம் காரணமாக கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றிருந்தார். அதன் பிறகு அவர் அணியுடன் தாமதமாக இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற அடுத்த 10 நாட்கள் கழித்து ஐபிஎல் தொடரிலிருந்து மார்ஷ் காயம் காரணமாக முற்றிலுமாக விலகியதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காயமடைந்து வெளியேறிய மார்ஷ்க்கு பதிலாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த குல்புதின் நயிப் மாற்றுவீரராக அவரது அடிப்படை விலையான 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் வேறுயெந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த – விராட் கோலி

33 வயதான குல்புதின் நயிப் ஆப்கானிஸ்தான் அணிக்காக 82 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ரஷீத் கான், முகமது நபி, நூர் அகமது, நவீன் உல் ஹக், ஓமர்சாய் வீரர்கள் விளையாடி வரும் வேளையில் தற்போது இவரும் அந்த வரிசையில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement