ஐ.பி.எல் வரலாற்றில் வேறுயெந்த பேட்ஸ்மேனும் செய்யாத சாதனையை நிகழ்த்தி வரலாறு படைத்த – விராட் கோலி

Kohli
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மட்டும் ஒரே ஒரு வெற்றியுடன் இந்த தொடரில் கடைசி இடத்தில் பின்தங்கி இருந்தது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முக்கியமான லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியிருந்தது.

ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி எவ்வாறு இந்த சரிவிலிருந்து மீண்டு வரப்போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 41-வது லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூரு அணி ஒரு வழியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

குறிப்பாக 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்து அசத்தியது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 51 ரன்களையும், ரஜத் பட்டிதார் 50 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணியானது பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 171 ரன்களுக்குள் சுருண்டதனால் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெங்களூரு அணியின் துவக்க வீரராக விளையாடிய விராத் கோலி 43 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 51 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த அரைசதம் மூலம் அவர் தற்போது ஐபிஎல் வரலாற்றில் வேறுயெந்த பேட்ஸ்மேனும் படைக்காத மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 400 ரன்களுக்கு மேல் அடித்து அதிக ரன்களை குவித்து வீரராக முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : 0 ரன்ஸ்.. 7 விக்கெட்ஸ்.. 17 வயதில் யாராலும் உடைக்க முடியாத உலக சாதனை படைத்த இந்தோனேஷிய வீராங்கனை

அதேபோன்று இதற்கு முன்னதாக அவர் 9 சீசன்களில் விராட் கோலி 400-லும் மேற்பட்ட ரன்களை விளாசியுள்ளார். இந்த சீசனோடு சேர்த்து மொத்தமாக 10 சீசன்களில் 400-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த ஒரே ஒரு பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement