7 விக்கெட்ஸ்.. ஃபார்முக்கு வந்த பாண்டியா.. மும்பையின் போராட்டத்தை கடைசியில் கலைத்த கமின்ஸ்

MI vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் மே 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 55வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் திணறலாக விளையாடிய அபிஷேக் சர்மா 11 (16) ரன்னில் பும்ரா வேகத்தில் நடையை கட்டினார். அப்போது வந்த மயங் அகர்வால் 5 ரன்னில் அறிமுக வீரர் கம்போஜ் வேகத்தில் போல்ட்டானார். அடுத்த சில ஓவரில் அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 48 (30) ரன்களில் சாவ்லா சுழலில் அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய பாண்டியா:
அப்போது வந்த நித்திஷ் ரெட்டி 20 (15) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தார். அதே போல எதிர்புறம் அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிச் க்ளாசின் 2 (4) ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் கிளீன் போல்ட்டானார். அதனால் 96/5 என தடுமாறிய ஹைதராபாத் அணிக்கு அடுத்ததாக வந்த மார்க்கோ யான்சன் 17, சபாஷ் அஹ்மதை 10 ரன்களில் ஹர்திக் பாண்டியா காலி செய்தார்.

அதனால் 124/7 என சரிந்த ஹைதராபாத் 150 ரன்கள் தாண்டாது என்று அந்த அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். இருப்பினும் அப்போது கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய கேப்டன் பட் கமின்ஸ் 2 பவுண்டரி 2 சிக்சருடன் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடிய 35* (17) ரன்கள் குவித்தார். அந்த வகையில் நன்றாக பந்து வீசிய மும்பை ஒரு கட்டத்தில் ஹைதராபாத்தை 150 ரன்களுக்குள் சுருட்டி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் முக்கியமான 35 ரன்கள் அடித்த கமின்ஸ் ஹைதெராபாத் வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான நல்ல ரன்கள் எடுத்துக் கொடுத்தார் என்றே சொல்லலாம். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஹைதராபாத் போராடி 173/8 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: இதுவே பெரிய விஷயம்.. 2024 டி20 உ.கோ அணியில் வேண்டுமென்றே கழற்றி விட்டாங்களா? நடராஜன் பதில்

குறிப்பாக இந்த வருடம் ஆரம்பத்தில் தடுமாறிய ஹர்திக் பாண்டியா முதல் 7 போட்டிகளில் வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்து சுமாராக பந்து வீசினார். ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக தேர்வான பின் விளையாடிய கடைசி 3 ஐபிஎல் போட்டிகளில் அவர் 7 விக்கெட்டுகளை எடுத்து ஃபார்முக்கு வந்துள்ளது இந்திய அணிக்கு பலத்தை சேர்ப்பதாக அமைந்தது.

Advertisement