பிளேயர்ஸ் மாற்றத்தால் பிரயோஜனம் இல்ல.. ஆர்சிபி கோப்பை வெல்ல அதை மாத்துங்க.. கிப்ஸ் கொடுத்த ஐடியா

Herschelle Gibbs 2
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களுடைய முதல் 9 போட்டிகளில் 2 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று கோப்பை வெல்லுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னதாக 2008 முதல் ஐபிஎல் தொடரில் அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் ஜேக் காலிஸ், கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற மகத்தான வீரர்களுடன் பெங்களூரு அணி களமிறங்கியது.

இருப்பினும் அழுத்தமான போட்டிகளில் முக்கிய நேரத்தில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள அந்த அணி வெற்றியையும் கோப்பையும் எதிரணிகளுக்கு தாரை வார்த்து வருகிறது. அந்த தோல்விக்கு பெங்களூரு அணியின் பவுலர்கள் சுமாராக செயல்பட்டு வருவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதை தடுப்பதற்காக பல கோடி ரூபாய்களை செலவழித்த பெங்களூரு நிர்வாகம் நிறைய நட்சத்திர பவுலர்களை வாங்கியது.

- Advertisement -

கிப்ஸ் ஐடியா:
ஆனால் அவர்களும் பெரிய அளவில் சிறப்பாக செயல்பட்டு பெங்களூரு அணியின் வெற்றிகளில் பங்காற்றவில்லை என்றே சொல்லலாம். இது போக கடந்த 15 வருடங்களில் பல பயிற்சியாளர்களை மாற்றிய பெங்களூரு நிர்வாகம் 3 முறை தங்களுடைய அணியின் பெயரை மாற்றி புதுப்புது ஜெர்ஸிகளை அணிந்து விளையாடி வருகிறது. ஆனாலும் கண்ணாடியை திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும் என்ற வகையில் களத்தில் பெங்களூரு அணியின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் பெங்களூரு கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் பெங்களூரு அணி குறைந்தபட்சம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று பின் கோப்பை வெல்வதற்கு வீரர்கள், பயிற்சியாளர்களை காட்டிலும் சொந்த ஊரான எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தின் பிட்ச்சை மாற்றயமைக்க வேண்டும் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்சல் கிப்ஸ் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“பயிற்சியாளர்கள் முதல் வீரர்கள் வரை ஒவ்வொரு வருடமும் ஆர்சிபி அணி பல மாற்றங்களை செய்து விட்டது. இருப்பினும் வெற்றி கிடைக்கவில்லை. எனவே மற்ற அனைத்தையும் மாற்றுவதை விட பிட்ச்சின் இயற்கையை மாற்றுவது மிகவும் முக்கியம்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவது போல பெங்களூரு மைதானம் எட்ஜ் பட்டாலே சிக்ஸர் பறக்கும் அளவுக்கு ஃபிளாட்டான பிட்ச்சை கொண்ட சிறிய மைதானமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ரிட்டையர்மென்ட் அவங்க விருப்பம்.. 2024 டி20 உ.கோ அப்றம் இந்தியாவுக்கு விராட், ரோஹித் வேண்டாம்.. யுவி பேட்டி

அதை பயன்படுத்தி ஹைதராபாத் 287 ரன்கள் அடித்தது போல பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கும் எதிரணிகள் வெற்றியைப் பறித்து செல்கின்றன. எனவே சென்னை சேப்பாக்கம் போல பேட்டிங், பவுலிங்க்கு சமமான பிட்ச்சை சின்னசாமி மைதானத்தில் அமைப்பது ஆர்சிபி வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement