டிசம்பர் 14க்கு அப்றம் முழுசா பண்ணிருக்கேன்.. ஸ்கூல் படிச்சதே வான்கடேவில் தான்.. சூரியகுமார் பேட்டி

Suryakumar 2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் மே 6ஆம் தேதி நடைபெற்ற 55வது லீக் போட்டியில் ஹைதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48, கேப்டன் பட் கமின்ஸ் 35* ரன்கள் எடுத்தனர்.

மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் சேசிங் செய்த மும்பை அணிக்கு ரோகித் சர்மா 4, இசான் கிசான் 9, நமன் திர் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 31/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் அபாரமாக விளையாடி சதமடித்து 102* (51) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

வான்கடே ஸ்கூல்:
அவருடன் திலக் வர்மா 37* (32) ரன்கள் எடுத்ததால் 17.2 ஓவரிலேயே மும்பை எளிதாக வெற்றி பெற்றது. அதனால் 5வது தோல்வியை பதிவு ஹைதராபாத் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் பின்னடைவை சந்தித்தது. மும்பையின் இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய சூரியகுமார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் சந்தித்த காயத்துக்கு பின் இன்று தான் முழுமையாக 20 ஓவர்கள் ஃபீல்டிங் செய்ததாக சூரியகுமார் தெரிவித்துள்ளார். எனவே 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் முழுமையாக விளையாடுவது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் வான்கடே மைதானத்தில் பள்ளி அளவில் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதை நான் நீண்ட நேரம் கழித்து செய்கிறேன். 14 டிசம்பருக்குப் பின் இப்போட்டியில் தான் முழுமையாக 20 ஓவர்கள் ஃபீல்டிங் செய்து 18 ஓவர்கள் பேட்டிங் செய்தேன். அதனால் கொஞ்சம் சோர்வு இருந்தது. மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. அந்த நேரத்தில் நான் மும்பை அணிக்கு தேவைப்பட்டேன் என்று கருதினேன். குறிப்பாக கடைசி வரை ஒருவர் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் நான் சென்று விளையாடினேன்”

இதையும் படிங்க: 102 ரன்ஸ்.. ஹைதராபாத்தை அடித்து நொறுக்கிய சூரியகுமார்.. மும்பை அணிக்காக அபார சாதனை.. தப்பிய சிஎஸ்கே

“களத்தில் என்னுடைய நேரத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். அது மும்பை ஸ்கூலின் கலையாகும். வான்கடே மைதானத்தில் நான் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன். பந்து சீம் செய்வதை நிறுத்தியதும் நான் என்னுடைய அனைத்து ஷாட்டுகளையும் அடித்தேன். அதை நான் பயிற்சியில் செய்துள்ளேன்” என்று கூறினார். இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து மும்பை 9வது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement