102 ரன்ஸ்.. ஹைதராபாத்தை அடித்து நொறுக்கிய சூரியகுமார்.. மும்பை அணிக்காக அபார சாதனை.. தப்பிய சிஎஸ்கே

Suryakumar 102
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மே 6ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 55வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத்துக்கு 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய அபிஷேக் சர்மா 11 ரன்னில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்.

அதைத்தொடர்ந்து வந்த மயங் அகர்வால் 11 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 48 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டி 20 ரன்கள் பாண்டியா வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிச் க்ளாஸென் 2 ரன்னில் பியூஸ் சாவ்லா சுழலில் போல்ட்டானார்.

- Advertisement -

மும்பை வெற்றி:
போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த மார்க்கோ யான்சன் 17, சபாஷ் அகமது 10 ரன்களில் கேப்டன் பாண்டியா வேகத்தில் நடையை கட்டினர். அதனால் 124/7 என தடுமாறிய ஹைதராபாத் அணி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது கடைசி நேரத்தில் கேப்டன் பட் கமின்ஸ் அதிரடியாக 35* (17) ரன்கள் குவித்து காப்பாற்றினார். அதன் காரணமாக 20 ஓவரில் ஹைதராபாத் 173/8 ரன்கள் எடுத்தது.

மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்டிக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 174 ரன்களை துரத்திய மும்பைக்கு தடுமாற்றமாக விளையாடிய இசான் கிசான் 9 (7) ரன்னில் அவுட்டான நிலையில் மறுபுறம் திணறலாக விளையாடிய ரோகித் சர்மா 4 (5) ரன்களில் நடையை கட்டினார். போதாக்குறைக்கு அடுத்ததாக வந்த நமன் திர் டக் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 31/3 என ஆரம்பத்திலேயே மும்பை தடுமாறிய போது நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் திலக் வர்மா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் 50 ரன்கள் அடித்து மும்பையை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

நேரம் செல்ல செல்ல இரு மடங்கு அதிரடியாக விளையாடிய அவர் 12 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து 102* (51) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் திலக் வர்மா 37* (32) ரன்கள் எடுத்ததால் 17.2 ஓவரிலேயே 174/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட் வித்யாசத்தில் எளிதாக வென்றது. அதனால் புவனேஸ்வர் குமார், கேப்டன் கமின்ஸ், மார்கோ யான்சன் தலா 1 விக்கெட் எடுத்தும் ஹைதெராபாத் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் படிங்க: இந்தியா மாதிரி அணிக்கு எதிராக இதை செய்ங்க.. சேனலை க்ளோஸ் பண்ணிட்றேன்.. பாபருக்கு பஷித் சவால்

இதையும் சேர்த்து மும்பை அணிக்காக அதிக சதங்கள் (2) அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த சூரியகுமார் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் ஃபார்முக்கு திரும்பியது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வெற்றியால் லீக் சுற்றுடன் அதிகாரபூர்வமாக வெளியேறுவதை மும்பை சில நாட்கள் தள்ளி போட்டுள்ளது. மறுபுறம் ஹைதராபாத் 5வது தோல்வியை சந்தித்ததால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

Advertisement