ரிட்டையர்மென்ட் அவங்க விருப்பம்.. 2024 டி20 உ.கோ அப்றம் இந்தியாவுக்கு விராட், ரோஹித் வேண்டாம்.. யுவி பேட்டி

Yuvraj Singh 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. உலக டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் ரோகித் சர்மா இந்தியாவின் கேப்டனாக செயல்படுவார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருடைய தலைமையில் உலகக் கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இருப்பினும் அந்த அணியில் விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை தேர்வுக் செய்யக்கூடாது என்று சில கருத்துக்கள் காணப்படுகிறது. ஏனெனில் 2022 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

யுவராஜ் கருத்து:
எனவே ஸ்லோவான பிட்ச்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் அவரை தேர்வுக் குழு கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், சிவம் துபே போன்ற வீரர்கள் இளம் வீரர்கள் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்காக ஆற்றிய பங்கிற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஓய்வு பெறும் உரிமையை கொண்டுள்ளார்கள் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு பின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களை கழற்றி விடப்பட்டு முழுக்க முழுக்க இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று யுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுக்கு வயதாகும் போது மக்கள் உங்களுடைய வயதைப் பற்றி பேச துவங்குவார்கள். உங்களுடைய ஃபார்மை பற்றி மறந்து விடுவார்கள். அவர்கள் (விராட், ரோஹித்) இந்தியாவுக்காக விளையாடிய மகத்தான வீரர்கள். எனவே அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெறுவதற்கு தகுதியுடையவர்கள். இருப்பினும் டி20 ஃபார்மட்டில் நான் நிறைய இளம் வீரர்களை பார்க்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேற மிட்சல் மார்ஷ்க்கு பதிலாக ஒப்பந்தமான ஆப்கானிஸ்தான் வீரர் – யார் தெரியுமா?

“ஏனெனில் அது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடும் அனுபவ வீரர்களின் மீதான அழுத்தத்தை குறைக்கும். எனவே இந்த டி20 உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய அணிக்குள் நிறைய இளம் வீரர்கள் வருவதை நான் பார்க்க விரும்புகிறேன். அவர்களை வைத்து அடுத்த உலகக் கோப்பைக்கான டி20 அணியை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement