அவர் ஒருவருக்காக கோப்பையை ஜெயிக்க நெனச்சோம். இறுதியில் ஜெயிச்சது ஹேப்பி – தீபக் சாஹர் ஓபன்டாக்

Deepak
- Advertisement -

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. தோனி தலைமையிலான சென்னை அணி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றபோது ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் தற்போது மீண்டும் வந்த சென்னை அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

csk 1

- Advertisement -

இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கையுடன் இருந்தோம். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருந்தாலும் இந்த சீசனை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தது மிகவும் மகிழ்ச்சி.

என்னுடைய நான்காவது ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியின் பக்கம் நிற்பதில் மனநிறைவு. இந்த இறுதிப் போட்டியில் நாங்கள் முதல் விக்கெட்டுக்காக காத்துக் கிடந்தோம். ஏனெனில் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டர் அவ்வளவு பிரமாதமாக இந்த முறை செயல்படவில்லை என்பதை அறிந்திருந்ததால் ஒருசில விக்கெட்டுகள் விழுந்தால் போட்டி எங்கள் பக்கம் திரும்பும் என்று நினைத்து அதன்படியே செயல்பட்டோம்.

deepak 1

கடந்த முறை மோசமான சீசன் அமைந்த பிறகு இம்முறை வலுவாக நாங்கள் திரும்பி வர வேண்டும் என்று நினைத்தோம். அதுமட்டுமின்றி நாங்கள் எல்லோருமே இம்முறை எங்கள் அணியின் கேப்டன் தோனிக்காகவே சிறப்பாக விளையாடினோம், அவருக்காக கோப்பையை கைப்பற்றி கொடுக்க வேண்டும் என்றும் அனைவரும் உற்சாகத்துடன் செயல்பட்டோம் என்று தீபக் சஹர் கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : மீண்டும் அப்பாவாகவுள்ள தோனி. யெஸ் சாக்க்ஷி இஸ் ப்ரெக்னென்ட் – உறுதி செய்த சி.எஸ்.கே வீரரின் மனைவி

இந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடி தீபக் சஹர் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement