ஐபிஎல் 2022 : கே.எல் ராகுலின் நெருங்கிய நண்பரையே கேப்டனாக அறிவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி – அதிகாரபூர்வ அறிவிப்பு

pbks
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இந்த தொடரை இந்த வருடம் இந்தியாவிலேயே நடத்துவதற்கு உண்டான அனைத்து வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய ஐபிஎல் தொடர் 2 மாதங்கள் நடைபெற உள்ளது.

Auction

- Advertisement -

இதை அடுத்து ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று துவங்கி 2 மாதங்கள் ரசிகர்களை மகிழ்வித்து பின்னர் வரும் மே 29-ஆம் தேதி நடைபெறுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வருடத்திற்கான 70 லீக் போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் பைனல் உள்ளிட்ட முக்கியமான பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ்:
முன்னதாக இந்த தொடருக்காக நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் அந்த அணியிலிருந்து வெளியேறினார். கடந்த 2 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வந்த அவரை அந்த அணி நிர்வாகம் மீண்டும் தக்க வைக்க விரும்பிய போதும் அதற்கு சம்மதம் தெரிவிக்காத அவர் தற்போது 17 கோடி என்ற மிகப்பெரிய சம்பள தொகைக்கு புதிதாக தோற்றுவிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட ஒப்பந்தமாகியுள்ளார்.

kxip

இதனால் தங்கள் அணிக்கு தேவையான கேப்டனை பெங்களூருவில் நடந்த வீரர்கள் ஏலத்தில் வாங்கலாம் என்ற முடிவில் இருந்த பஞ்சாப் அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த இளம் வீரரை வாங்க முயற்சித்தது. ஆனால் அவரை 12.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு தட்டித் தூக்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தங்கள் அணியின் புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அவரைப்போல வேறு சில கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த வீரர்களையும் வாங்க முடியாமல் ஏமாற்றமடைந்த பஞ்சாப் அணி நிர்வாகம் ஏலம் முடிந்து 2 வாரங்கள் கடந்த பின்பும் கூட தங்களது கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் இருந்து வந்தது அந்த அணி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

Mayank-Agarwal

புதிய கேப்டன் மாயங்க் அகர்வால்:
இந்நிலையில் தங்களுக்கான புதிய கேப்டனை தேர்வு செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒருவழியாக இன்று தங்களின் புதிய கேப்டன் பற்றிய அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி ஐபிஎல் 2022 தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பெங்களூருவைச் சேர்ந்த இளம் இந்திய வீரர் மயங்க் அகர்வால் செயல்பட உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த வருடம் அந்த அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட நிலையில் தற்போது புதிய முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வெறும் 1 கோடிக்கு ஒப்பந்தமாகி விளையாடி வரும் அவர் கடந்த சில வருடங்களாக அந்த அணியின் பேட்டிங் துறையில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். அதன் காரணமாக இந்த வருடம் அவரை 12 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்துள்ள அந்த அணி நிர்வாகம் தற்போது புதிய கேப்டனாகவும் அறிவித்துள்ளது.

KXIP-1

முதல் கப் வாங்கி தருவாரா:
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாட துவங்கிய அவர் தற்போது வரை 100 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டுள்ளார் என்றாலும் ஒரு அணிக்கு முழு நேர கேப்டனாக இப்போதுதான் முதல் முறையாக செயல்பட உள்ளார். தற்போது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளது பற்றி அவர் பேசியதாவது :

- Advertisement -

“நான் 2018 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கிறேன். இந்த அருமையான அணிக்கு தற்போது கேப்டனாக செயல்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொறுப்பை நான் மிகுந்த நேர்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருக்கும் வீரர்களின் திறமையால் எனது பணி எளிதாகும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : 12 மேட்ச் ஜெயிச்சத விடுங்க. இப்போ இந்திய அணிக்கு புதிய தலைவலி இதுதான் – சுனில் கவாஸ்கர் அறிவுரை

ஐபிஎல் தோற்றுவிக்கப்பட்ட 2008 முதல் தொடர்ந்து அனைத்து சீசன்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் விளையாடி வந்த நிலையில் கடந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் என அந்த அணியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதுநாள் வரை அந்த அந்த அணிக்கு யுவராஜ் சிங், குமார் சங்ககாரா, விரேந்தர் சேவாக் உள்ளிட்ட எத்தனையோ ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் கூட அந்த அணியால் இதுநாள் வரை ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.

சொல்லப்போனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது என்பதே அரிதாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த முறை சிறப்பாக செயல்பட்டு முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து சாம்பியன் பட்டத்தை மாயங்க் அகர்வால் வாங்கிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Advertisement