1 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. தோல்விக்கு பிறகு சன் ரைசர்ஸ் பவுலர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன் – பேசியது என்ன?

Samson
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 50-வது லீக் போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஹைதராபாத் அணியிடம் தோற்று ஏமாற்றமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் நடப்பு தொடரில் இரண்டாவது தோல்வியை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 76 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்ததால் 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்றது. இந்த சீசன் முழுவதுமே இது போன்ற சில அற்புதமான போட்டிகளை நாங்கள் சந்தித்துள்ளோம். சன் ரைசர்ஸ் அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்து எங்களை தோற்கடித்தனர்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளில் மிகக் குறைந்த மார்ஜினில் நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளோம். எப்போதுமே ஒரு போட்டி முழுவதுமாக முடிந்தால் தான் அது முற்றுப்பெறும். இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் நாங்கள் தோல்வியை தழுவியது ஏமாற்றம் அளிக்கிறது. புதுப்பந்தில் விளையாடுவது சற்று கடினமாக இருந்தது. பின்னர் பந்து பழையதாக மாற மாற பேட்டுக்கு எளிதாக வந்தது.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்கெதிராக 1 ரன் வித்தியாசத்தில் பெற்ற த்ரில் வெற்றி குறித்து பேசிய பேட் கம்மின்ஸ் – விவரம் இதோ

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். ஆனால் ஜாஸ் பட்லரும், நானும் பவர்பிளேவின் போதே ஆட்டமிழந்ததால் எதிரணி ஆரம்பத்திலேயே உத்வேகத்தை பெற்றிருந்தது என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement