12 மேட்ச் ஜெயிச்சத விடுங்க. இப்போ இந்திய அணிக்கு புதிய தலைவலி இதுதான் – சுனில் கவாஸ்கர் அறிவுரை

Gavaskar
- Advertisement -

கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி லீக் தொடரிலேயே வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் மிக பலம் வாய்ந்த அணியாக திகழும் இந்திய அணி உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்வி அனைவரையும் வருத்தமடையச் செய்த வேளையில் அடுத்ததாக இந்திய அணி விளையாடிய 12 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

IND-1

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ந்து மூன்று தொடர் வெற்றிகளையும் அதற்கு முன்னதாக உலக கோப்பை தொடரின் இறுதியில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா ஆகிய அணிகளையும் இந்திய அணி வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்த இலங்கை தொடரையும் வொயிட் வாஷ் செய்து கைப்பற்றிய இந்திய அணியானது தொடர்ச்சியாக 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இதே பலத்துடன் நிச்சயம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் அணியை பலப்படுத்தி வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கூட இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அணியில் உள்ள வீரர்களும் பரிசோதிக்கப்பட்டனர். அந்த வகையில் இனி அடுத்தடுத்து வரும் தொடர்களிலும் இந்திய அணி வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு பலமான ஒரு அணியை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்ல இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.

Bishnoi

இந்நிலையில் இந்த இலங்கை தொடரில் இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் அந்த அணியை எளிதாக வீழ்த்தியிருந்தாலும் இந்திய அணியில் இருக்கும் ஒரு சிக்கல் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. ஆனாலும் நமது அணியின் டெத் பவுலிங் சற்று பலவீனமாக இருப்பதாக நினைக்கிறேன்.

- Advertisement -

ஏனெனில் இரண்டாவது போட்டியின் போது கடைசி 5 ஓவர்களில் 80 ரன்கள் விட்டுக் கொடுத்த இந்திய பவுலர்கள் நேற்றைய போட்டியில் கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தனர். இதேபோன்று டெத் பவுலிங்கில் ரன்களை ஓரிரு போட்டிகளில் விட்டுக்கொடுத்தால் பரவாயில்லை. தொடர்ந்து விட்டுக் கொடுத்து இருந்தால் அது ஆட்டத்தின் நிலைமையும். இந்திய அணியின் வலிமையும் சோதிக்கும் விடயமாக மாறிவிடும்.

இதையும் படிங்க : இலங்கையை பந்தாடிய இந்தியா வைட்வாஷ் வெற்றி ! நியூஸிலாந்தை பின்னுக்குத்தள்ளி புதிய உலகசாதனை

எனவே இனிவரும் போட்டிகளில் முதல் பத்து ஓவர்களையும், அடுத்து டெத் ஓவர்களில் 8 ஓவர்களையும் யார் வீச போகிறார்கள் என்ற தெளிவான திட்டமும் அதற்குண்டான பவுலர்களையும் இந்திய அணி முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி பவுலர்களை பயன்படுத்த வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் டெத் பவுலிங்கில் இந்திய அணி தற்போது உள்ள குறையை சரியாக கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தாகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement