அது கொஞ்சம் குறைஞ்சுடுச்சு.. இல்லனா ஹைதெராபாத்தை ஃபினிஷ் பண்ணிருப்பேன்.. 1 ரன் தோல்வியால் ரியன் பராக் வருத்தம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 50வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 1 ரன் வித்யாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதெராபாத் நிதிஷ் ரெட்டி 76*, ஹென்றிச் க்ளாஸென் 42*, டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 202 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானலும் ஜெய்ஸ்வால் 67, ரியன் பராக் 77 ரன்கள் எடுத்ததால் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் சிம்ரோன் ஹெட்மயர் 13, ரோவ்மன் போவல் 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் த்ரில் வெற்றி பெற்ற ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

பராக் ஏமாற்றம்:
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் ராஜஸ்தான் வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் சரியான நேரத்தில் தமிழக வீரர் நடராஜன் அந்த ஜோடியை பிரித்தது போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கி கடைசியில் ராஜஸ்தானுக்கு தோல்வியையும் கொடுத்தது. இந்நிலையில் தன்னுடைய ஃபார்ம் கொஞ்சம் குறைந்து விட்டதால் இப்போட்டியை ஃபினிஷிங் செய்ய முடியாமல் போனதாக ரியன் பராக் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் நிறைய இடங்களில் முன்னேற வேண்டியுள்ளது. நான் என்னுடைய சிறந்த ஃபார்மில் இல்லை. இல்லையென்றால் இந்த போட்டியை வெற்றிகரமாக முடித்திருப்பேன். எனவே என்னுடைய தவறிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அதை மீண்டும் செய்யாமல் இருக்க முயற்சிக்க உள்ளேன். என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை”

- Advertisement -

“ஒருவேளை சதமடித்திருந்தால் சிறந்தது என்று சொல்லியிருக்கலாம். எப்போதும் தோல்வியை சந்தித்த அணியில் இருப்பது நல்ல உணர்வை கொடுக்காது. நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். எங்களுடைய தவறுகளை பற்றி கவலைப்படாமல் செயல்முறையில் கவனம் செலுத்த வேண்டும். இப்போதும் நாங்கள் புள்ளிப்பட்டியலில் நல்ல இடத்தில் இருக்கிறோம்”

இதையும் படிங்க: 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி.. தோல்விக்கு பிறகு சன் ரைசர்ஸ் பவுலர்களை பாராட்டிய சஞ்சு சாம்சன் – பேசியது என்ன?

“கடைசி 2 – 3 ஓவர்களில் நாங்கள் சில தவறுகளை செய்தோம். அது எங்களுக்கு தோல்வியை கொடுத்தது. அது தான் ஐபிஎல் தொடராகும். நாங்கள் எங்களுடைய விக்கெட்டை கொடுத்ததாக நினைக்கவில்லை. நடராஜன் மெதுவான பவுன்சர் பந்துகளை வீசியதால் ஜெய்ஸ்வால் ஸ்கூப் அடிப்பதற்கு முயற்சித்தார். நானும் அவுட்டான பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்தேன். இருப்பினும் அந்த சமயத்தில் நன்றாக பந்து வீசிய ஹைதராபாத், புவனேஸ்வர் குமார், கமின்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement