ரோஹித் சர்மா மும்பை கேப்டனாக நீக்கப்பட்டது ஏன்? மகிளா ஜெயவர்தனே விளக்கம்

Mahela Jayawardene.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் 2013இல் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பையை வென்ற ரோஹித் சர்மா 2020 வரையிலான காலகட்டங்களில் மொத்தமாக 5 கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக மும்பையை ஜொலிக்க வைத்த பெருமைக்குரியவர்.

மேலும் 2014இல் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவரை தற்போது மும்பை அணி நிர்வாகம் இப்படி கழற்றி விட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. காரணம் ஒரு கோப்பையை வென்ற ஹர்திக் பாண்டியாவை விட 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா அனுபவத்திலும் தரத்திலும் ஜாம்பவானாக போற்றப்படுகிறார்.

- Advertisement -

மும்பை விளக்கம்:
இருப்பினும் 2021, 2022 ஆகிய சீசன்களில் ரோகித் சர்மா தலைமையில் சுமாராக விளையாடிய மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடங்களை பிடித்தது. மேலும் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை கடந்த சீசனில் படைத்தார்.

எனவே 36 வயதை கடந்து விட்ட அவருக்கு பதிலாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக மும்பை அணியின் உலக செயல்பாடுகளின் ஹெட் மகிளா ஜெயவர்த்தனே கூறியுள்ளார். இது பற்றி மும்பை நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் பில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“இது மும்பை இந்தியன்ஸ் அணியின் மரபு கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். குறிப்பாக மும்பை அணி எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் தத்துவத்தின் உண்மையான அம்சமாகும். மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே சச்சின் முதல் ஹர்பஜன் வரை ரிக்கி பாண்டிங் முதல் ரோஹித் சர்மா வரை வெற்றிகளில் பங்காற்றியதுடன் வருங்காலத்தை வலுவாக்கிய மகத்தான கேப்டன்களை கொண்டது”

இதையும் படிங்க: 126/4 டூ 136க்கு ஆல் அவுட்.. இங்கிலாந்து அணியை சுருட்டிய இந்திய மகளிரணி.. புதிய உலக சாதனை டார்கெட்

“அந்த வரிசையில் ஐபிஎல் 2024 சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்கிறார். அதே சமயம் ரோஹித் சர்மாவின் விதிவிலக்கான தலைமைக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2013 முதல் மும்பை அணியின் கேப்டனாக அவர் அபாரத்திற்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் செயல்பட்டார். எங்களுக்கு இணையற்ற வெற்றிகளை தந்தது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக அவர் தன்னை உறுதிப்படுத்தியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement