நாங்க பண்ண இந்த ஒரு தப்பால தான் பஞ்சாப் அணிக்கெதிராக தோல்வியை சந்தித்தோம் – ஒப்புக்கொண்ட ருதுராஜ்

Ruturaj
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணியானது பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் 62 ரன்களையும், ரஹானே 29 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பேர்ஸ்டோ 46 ரன்களையும், ரைலி ரோஸோ 43 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில் : இன்னும் இந்த போட்டியில் 50 முதல் 60 ரன்கள் வரை நாங்கள் கூடுதலாக குவித்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது.

- Advertisement -

இருப்பினும் இந்த போட்டியில் எங்களால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் போனது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இம்பேக்ட் பிளேயர் ரூல்ஸ் இருப்பதினால் இந்த இலக்கு நிச்சயம் பத்தாமல் போனது. நான் டாஸ் போடுவதை பிராக்டிஸ் செய்தாலும் எனக்கு சாதகமாக டாஸ் அமையவில்லை. போட்டிகளில் விளையாடுவதை விட டாஸ் போடும்போது எனக்கு மிகப்பெரிய அழுத்தம் இருக்கிறது.

இதையும் படிங்க : சோளி முடிஞ்சு.. சேப்பாக்கம் கோட்டையில் பெற்ற வெற்றியால்.. சிஎஸ்கே அணியை கலாய்த்து தள்ளிய பஞ்சாப்

கடந்த போட்டியில் நாங்கள் 78 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பெற்றிருந்தோம். அதேபோன்று இந்த போட்டியிலும் 200 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். எங்களது அணியில் உள்ள ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ளது எங்களுக்கு பின்னடைவை தந்துள்ளது என ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement