PBKS vs LSG : பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய லக்னோ – நூலிழையில் ஆர்சிபி சாதனை தவறினாலும் புதிய வரலாறு படைத்த லக்னோ

LSG vs PBKS
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி மொகாலியில் நடைபெற்ற 38வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஷிகர் தவான் காயத்திலிருந்து குணமடைந்து பஞ்சாப் அணியின் கேப்டனாக டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணிக்கு 41 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட கேப்டன் கேஎல் ராகுல் 12 (9) ரன்கள் நடையை கட்டினாலும் மறுபுறம் பஞ்சாப் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய கெய்ல் மேயர்ஸ் 20 பந்துகளில் அரை சதமடித்து 7 பவுண்டரி 4 சிக்சருடன் 54 (24) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அந்த நிலைமையில் அடுத்ததாக களமிறங்கி ஜோடி சேர்ந்த இளம் வீரர் ஆயுஷ் படோனி – மார்க்க ஸ்டோனிஸ் ஆகியோர் பேட்டிங்க்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் தங்களது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி பஞ்சாப் பவுலர்களை வெளுத்து வாங்கினார்கள். 6வது ஓவரில் சேர்ந்த இவர்கள் 14 வது ஓவர் வரை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 3வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய போது ஆயுஷ் படோனி 3 பவுண்டரி 3 சிக்சருடன் 43 (24) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

மிரட்டல் பேட்டிங்:
அந்த நிலைமையில் களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் தனது பங்கிற்கு முதல் பந்திலிருந்தே பஞ்சாப் பவுலர்களை வெறித்தனமாக வெளுத்து வாங்கி அதிரடி காட்டிய நிலையில் மறுபுறம் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோ 200 ரன்களை தாண்ட உதவிய மார்கஸ் ஸ்டோனிஸ் அரை சதமடித்து 6 பவுண்டரி 5 சிக்சருடன் 72 (40) ரன்களை விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் தனது பங்கிற்கு சரவெடியாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரான் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (19) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழக்க தீபக் ஹூடா 11* (6) ரன்களும் க்ருனால் பாண்டியா 5* (2) ரன்களும் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் லக்னோ 257/5 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 250 ரன்களை தொட்ட 2வது அணியாக சாதனை படைத்த லக்னோ 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் வரலாற்றுச் சாதனை படைத்தது.

- Advertisement -

குறிப்பாக கடந்த 2013இல் புனேவுக்கு எதிராக கிறிஸ் கெயில் 175* ரன்கள் சூறாவளி புயல் ஆட்டத்தால் 263/5 ரன்கள் விளாசிய பெங்களூரு ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக சாதனை படைத்துள்ளது. அதை இப்போட்டியில் ரன் மழை பொழிந்து அடித்து நொறுக்கிய லக்னோ வெறும் ஒரு சிக்சர் இடைவெளியில் நூலிலையில் தவற விட்டாலும் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த டாப் அணிகளின் பட்டியல்:
1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 263/5 – புனேவுக்கு எதிராக, 2013
2. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் : 257/4 – பஞ்சாப்புக்கு எதிராக, 2023*
3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு : 248/3 – குஜராத்துக்கு எதிராக, 2016
4. சென்னை சூப்பர் கிங்ஸ் : 246/5 – ராஜஸ்தானுக்கு எதிராக, 2010

இதையும் படிங்க:சஞ்சு சாம்சன் செம ஸ்மார்ட்டான கேப்டன். இப்போ அவரு ரொம்ப மெச்சூர்டு ஆயிட்டாரு – ரவி சாஸ்திரி புகழாரம்

அப்படி 250 ரன்களை தொட்டதுமே பெருமை பேசிக் கொண்டிருக்கும் பெங்களூரு ரசிகர்கள் வயிற்றில் லக்னோ புளியை கரைத்தது. இருப்பிடம் கடைசி ஓவரில் அந்த சாதனை தப்பியதால் உண்மையாகவே சமூக வலைதளங்களில் அந்த அணி ரசிகர்கள் நிம்மதியுடன் காணப்படுகிறார்கள். மறுபுறம் சுமாராக பந்து வீசிய பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 2 விக்கெட் எடுத்தார். இதை தொடர்ந்து பஞ்சாப்பும் தங்களது பவரை காட்டி வெற்றி காண்பதற்கு போராடி வருகிறது.

Advertisement