சஞ்சு சாம்சன் செம ஸ்மார்ட்டான கேப்டன். இப்போ அவரு ரொம்ப மெச்சூர்டு ஆயிட்டாரு – ரவி சாஸ்திரி புகழாரம்

Ravi-Shastri
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37-வது லீக் போட்டியானது நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் வடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களை குவித்தார்.

Jaiswal

- Advertisement -

பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே அடித்தது. அதன் காரணமாக ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி சென்னை அணியை வீழ்த்தியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது. அதோடு குறிப்பாக சஞ்சு சாம்சனின் கேப்டன்சியும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Zampa

ஏனெனில் மிகவும் பலம் வாய்ந்த சென்னை அணிக்கு எதிராக தனது ராஜஸ்தான் அணியை வழிநடத்தி அழைத்துச்சென்ற அவர் எந்த ஒரு பிரஷரும் இன்றி எளிதாக கையாண்டு அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சாம்சன் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய ஐபிஎல் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் தற்போது ஒரு கேப்டனாக மிகவும் முதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது செயல்பாடுகளில் அந்த முதிர்ச்சி நன்றாக வெளிப்படுகிறது. ஏனெனில் அவர் ஸ்பின்னர்களை டி20 கிரிக்கெட்டில் அற்புதமாக பயன்படுத்துகிறார். ஒரு நல்ல கேப்டனால் மட்டுமே மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் வைத்து சிறப்பாக கையாள முடியும்.

இதையும் படிங்க : அயர்லாந்தை அசால்ட்டாக சாய்த்த இலங்கை வரலாற்று வெற்றி – 71 வருட சாதனையை உடைத்த வீரர், புதிய உலக சாதனை

அந்த வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோரை சஞ்சு சாம்சன் வெகு சிறப்பாக பயன்படுத்தி வருகிறார் என ரவி சாஸ்திரி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement