6, 6, 4, 6, 6.. ரசித் கானை பொளந்த ஜேக்ஸ்.. கிங் கோலி க்ளாஸ்.. 14 வருடத்திற்கு பின் ஆர்சிபி அபார வெற்றி

GT vs RCB 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத் நகரில் 45வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் பெங்களூரு அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணிக்கு துவக்க வீரர்கள் சகா 5, கில் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் அன்னிக்கு சவாலை கொடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் மூன்றாவது விக்கெட்டுக்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத்தை மீட்டெடுத்த இந்த ஜோடியில் ஷாருக்கான் முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து 58 (30) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

மாஸ் சதம்:
அதில் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய சாய் சுதர்சன் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 84* (49) ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் குஜராத் 200/3 ரன்கள் எடுத்தது. பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல், சிராஜ், ஸ்வப்னில் சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அதை தொடர்ந்து 201 ரன்களை துரத்திய பெங்களூரு அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த கேப்டன் டு பிளேஸிஸ் 24 (12) ரன்களில் சாய் சுதர்சன் சுழலில் சிக்கினார்.

இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தம்முடைய ஸ்டைலில் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்ததாக வந்த வில் ஜேக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி குஜராத் பவுலர்களை பந்தாடினார். அந்த வகையில் ஒன்றாக சேர்ந்து குஜராத்தை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடியில் விராட் கோலி முதலாவதாக அரை சதமடித்து பெங்களூரு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

- Advertisement -

ஆனால் மறுபுறம் வில் ஜேக்ஸ் அவரை விட வேகமாக விளையாடி மோகித் சர்மாவுக்கு எதிரான ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்தார். அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல கொஞ்சமும் நிற்காமல் அதிரடியாக விளையாடிய அவர் 80 ரன்களை நெருங்கிய போது ரசித் கானுக்கு எதிராக 6, 6, 4, 6, 6 என ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்து தனது முதல் ஐபிஎல் சதத்தை தொட்டு மாஸ் ஃபினிசிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: விராட் கோலிக்கு இதை செஞ்சோம்ன்னா 2007 மாதிரி.. இந்தியா 2024 டி20 உ.கோ தோற்கும்.. எச்சரித்த சேவாக்

அந்த வகையில் 5 பவுண்டரி 10 சிக்ஸருடன் வில் ஜேக்ஸ் 100* (41) ரன்களும் விராட் கோலி 70* (44) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 16 ஓவரிலேயே 206/1 ரன்கள் எடுத்த பெங்களூரு அணி 14 வருடங்கள் கழித்து ஐபிஎல் தொடரில் 200+ ரன்கள் இலக்கை 200 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 204 ரன்களை சேசிங் செய்து வென்றதே பெங்களூருவின் முந்தைய சாதனையாகும். அதனால் 3வது வெற்றியைப் பெற்ற ஆர்சிபி அணி ப்ளே ஆப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

Advertisement