3 விக்கெட்ஸ்.. ராஜஸ்தானை கட்டுப்படுத்திய சிமர்ஜித்.. தோனியின் பரிதாப சாதனையை சமன் செய்த ருதுராஜ்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 61வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு 43 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் தடுமாற்றமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 24 (21) ரன்களில் அவுட்டானார். அவரை அபாரமாக பந்து வீசி காலி செய்த சிமர்ஜித் சிங் அடுத்த ஓவரிலேயே மறுபுறம் திணறிய ஜோஸ் பட்லரை 21 (25) ரன்களில் அவுட்டாக்கி ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அழுத்தத்தை உண்டாக்கினார்.

- Advertisement -

அசத்திய சிமர்ஜித்:
அதனால் 49/2 தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் நிதானமாக விளையாட முயற்சித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ரியன் பராக் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் அந்த ஜோடியில் மிகவும் தடுமாற்றமாக விளையாடிய சஞ்சு சாம்சனை 15 (19) ரன்கள் எடுத்த போது அவுட்டாக்கிய சிமர்ஜித் சிங் மீண்டும் ராஜஸ்தானுக்கு அழுத்தத்தை கொடுத்தார்.

அப்போது வந்த துருவ் ஜூரேல் அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த சுபம் துபே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் ரியான் பராக் 47* (35) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் ராஜஸ்தான் 141/5 ரன்கள் எடுத்தது. சென்னை சார்பில் அதிகபட்சமாக சிமர்ஜித் சிங் 3, சர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கையில் எம்எஸ் தோனி ஒப்படைத்தார். ஆனால் அப்போதிலிருந்தே டாஸ் வெற்றி பெறுவதில் அதிர்ஷ்டமின்மையால் தடுமாறி வரும் ருதுராஜூக்கு இந்த போட்டியிலும் நாணயம் சாதகமாக விழவில்லை. இதையும் சேர்த்து அவர் இந்த வருடம் 11 போட்டியில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க: இப்படி பவுலிங் போட்டா ஈஸியா அவுட்டாக்கலாம்.. 360 டிகிரி பேட்ஸ்மேன் சூர்யகுமாரின் வீக்னெஸை உடைத்த ராயுடு

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிக முறை டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த 2வது சென்னை கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் பரிதாப சாதனையை அவர் சமன் செய்தார். இதற்கு முன் கடந்த 2008 சீசனில் தோனியும் 11 போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தார். அதே பட்டியலில் 2012 சீசனில் 12 போட்டிகளில் தோல்வியை சந்தித்த தோனி அதிக முறை டாஸ் வீசுவதில் தோல்வி கண்ட சிஎஸ்கே கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement