தோல்வி கொடுத்த எதிரணியிடம் மணிகணக்கில் பேசிய ரோஹித்.. அப்படின்னா வாசிம் அக்ரம் சொன்னது உண்மை போலயே?

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் 9 தோல்வி 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தது. அதனால் மும்பை ஏற்கனவே முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறிய மும்பை ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவிக்கிறது.

முன்னதாக இந்த வருடம் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பதவியில் இருந்து நீக்குவதாக மும்பை நிர்வாகம் அறிவித்தது. அவருக்கு பதிலாக குஜராத்துக்கு முதல் சீசனிலேயே கோப்பையை வென்று கொடுத்த தங்களுடைய முன்னாள் வீரர் ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கிய மும்பை புதிய கேப்டனாக அறிவித்தது.

- Advertisement -

ரோஹித்தின் பேச்சுவார்த்தை:
அதற்கு மும்பை ரசிகர்களே கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முதல் போட்டியிலேயே ரோகித் சர்மாவை பவுண்டரி எல்லைக்கு சென்று ஃபீல்டிங் செய்யுமாறு புதிய கேப்டன் பாண்டியா வற்புறுத்தினார். அதனால் மேலும் கோபமடைந்த மும்பை ரசிகர்கள் தங்களுடைய கேப்டன் என்றும் பார்க்காமல் தொடர்ந்து பாண்டியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த சூழ்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு தாம் ரசிகன் அல்ல என்று ரோகித் சர்மா சமீபத்தில் விமர்சித்திருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் அப்படிப்பட்ட கருத்தைக் கொண்ட அவரை ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் பாண்டியா தலைமையிலான மும்பை நிர்வாகம் இம்பேக்ட் வீரராக களமிறக்கியது. அதிலிருந்தே இம்பேக்ட் வீரராக ரோகித் சர்மாவை மும்பை நிர்வாகம் வலுக்கட்டாயமாக களமிறங்கியது தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் தொடர்ந்து அவமானப்படுத்தும் மும்பை அணியிலிருந்து ரோஹித் சர்மா வெளியேறி அடுத்த வருடம் வேறு அணிக்காக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது அடுத்த வருடம் கண்டிப்பாக மும்பை அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறி கொல்கத்தா அணியில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: 3 விக்கெட்ஸ்.. ராஜஸ்தானை கட்டுப்படுத்திய சிமர்ஜித்.. தோனியின் பரிதாப சாதனையை சமன் செய்த ருதுராஜ்

அந்த சூழ்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டி மழையால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. அப்போது நேராக அந்த அணியின் உடை மாற்றும் அறைக்கு சென்ற ரோகித் சர்மா கொல்கத்தா வீரர்களுடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒன்றாக அமர்ந்து பேசினார். அத்துடன் கொல்கத்தா அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் அவர் களத்தில் நீண்ட நேரம் பேசினார். அதைப் பார்த்த ரசிகர்கள் அப்படியானால் வாசிம் அக்ரம் சொல்வது போல் அடுத்த வருடம் ரோஹித் சர்மா கொல்கத்தா அணிக்கு விளையாடுவாரோ என்று பேசி வருகின்றனர்.

Advertisement