ஐபிஎல் வரலாறு : கோப்பை வெல்லமுடியாத பஞ்சாப் கிங்ஸ் அணியும் – அதன் ராசியும் – ஒரு முழு அலசல்

PBKSvsCSK
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான தனது அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என கடந்த 2 வாரங்களாக யோசித்து வந்த பஞ்சாப் அணி நிர்வாகம் ஒரு வழியாக நேற்று அந்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஐபிஎல் 2022 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் மயங்க் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார். பெங்களூருவை சேர்ந்த இவர் ஏற்கனவே கடந்த சீசன்களில் கேஎல் ராகுல் தலைமையில் துணை கேப்டனாக செயல்பட்டவர் என்றாலும் முழுநேர கேப்டனாக ஒரு அணிக்கு இப்போதுதான் முதல் முறையாக செயல்பட உள்ளார்.

Mayank-Agarwal

- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இதுபோல புதிய கேப்டன்களை அறிவிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. சொல்லப்போனால் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 14 ஐபிஎல் தொடர்களில் அந்த அணி குறைந்தபட்சம் 10 கேப்டன்களை மாற்றியிருக்கும் என்றே கூறலாம். ஆனால் அதே சமயம் மும்பை, சென்னை போன்ற அணிகள் இதுநாள் வரை வெறும் ஒருசில கேப்டன்களை மட்டுமே நியமித்து அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக விளங்குகின்றன.

பஞ்சாப் அணியும் – கேப்டன்களும்:
பொதுவாக கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்றாகும். ஒரு அணி தோல்வி அடையும் நேரத்தில் திடீரென அதில் மாற்றங்களை செய்யாமல் தொடர்ந்து அதே வீரர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு அளித்தால் தான் செய்த தவறுகளிலிருந்து அவர்களும் பாடத்தை கற்று நாளடைவில் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தை பொறுத்தவரை எப்போதுமே ஒரு சீசனில் சொதப்பினால் உடனே அந்த வீரர்களை தூக்கி எறிந்துவிட்டு புதிய வீரர்களை பல கோடி ரூபாய் செலவில் வாங்கும் அணியாக காட்சி அளிக்கிறது.

punjab

அதாவது ஏலத்தில் தரமான தகுதியான வீரர்களை கண்டறிந்து வாங்காமல் நட்சத்திர அந்தஸ்தை பார்த்து பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாங்கும் ஒரு அணியாகவே பஞ்சாப் கிங்ஸ் வரலாற்றில் இருந்து வருகிறது. ஒரு அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் தானே கேப்டனாக வெற்றி பெற்று தர முடியும். ஏனெனில் எவ்வளவு முழு மூச்சுடன் விளையாடினாலும் கேப்டனால் வெற்றி பெற முடியாது. அந்த வகையில் அணியில் விளையாடும் வீரர்களைப் போலவே கேப்டன்களையும் விட்டுவைக்காத அந்த அணி நிர்வாகம் அவர்களை அடிக்கடி மாற்றும் அணியாக இருந்து வருகிறது.

- Advertisement -

கோப்பை வெல்லமுடியாத விதவிதமான கேப்டன்கள்:
சரி வரலாற்றில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து பின்னர் பஞ்சாப் கிங்ஸ் என அழைக்கப்பட்டு வரும் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டவர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

yuvraj

1. யுவராஜ் சிங்: கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையாக தோற்றுவிக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் பெரும்பாலான அணிகளில் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கேப்டனாக செயல்பட்டார்கள். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கேப்டனாக செயல்பட்டார். அந்தத் தொடரில் லீக் சுற்றில் அசத்திய அந்த அணி புள்ளிப் பட்டியலில் 3வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை.

- Advertisement -

2. குமார் சங்கக்காரா: உடனே பதறி அந்த அணி அடுத்த வருடமே இலங்கையைச் சேர்ந்த ஜாம்பவான் குமார் சங்கக்காரவை கேப்டனாக நியமித்தது. அதற்கான பலனை அனுபவிக்கும் வண்ணம் அந்த வருடம் சுமாராக செயல்பட்ட அந்த அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது.

Sangakkara

3. மஹிளா ஜெயவர்தானே: உடனே மீண்டும் பதறிய அந்த அணி நிர்வாகம் இலங்கையைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திரம் மகிளா ஜெயவர்தனேவை 2010இல் கேப்டனாக நியமித்தது. அவரும் தம்மால் முடிந்தவரை 472 ரன்கள் குவித்து சிறப்பான கேப்டன்ஷிப் செய்த போதிலும் இதர வீரர்கள் சொதப்பிய காரணத்தால் அந்த அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து மீண்டும் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

4. ஆடம் கில்கிறிஸ்ட்: சும்மாவே பதரும் பஞ்சாப் அணி நிர்வாகம் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்ததை அடுத்து 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட்டை கேப்டனாக நியமித்த போதிலும் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்த அந்த அணியால் மீண்டும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. இருப்பினும் முதல் முறையாக அவர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்த பஞ்சாப் அணி 2012ஆம் ஆண்டிலும் அவரை கேப்டனாக செயல்பட அனுமதித்தது. ஆனால் அப்போதும் அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாமல் 6வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

Gilchrist 1

5. டேவிட் ஹசி: இது வேலைக்கு ஆகாது என்பது போல் மீண்டும் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டேவிட் ஹஸியை அந்த அணி நிர்வாகம் புதிய கேப்டனாக அறிவித்தது. ஆனால் அப்போதும் மாற்றமடையாத அந்த அணி மீண்டும் 6வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது.

6. ஜார்ஜ் பெய்லி : அடுத்தடுத்து சீசன்களில் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியாததால் வழக்கம் போல மீண்டும் பதற்றமடைந்த அந்த அணி 2014இல் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லியை கேப்டனாக நியமித்தது. அந்த வருடம் கிளென் மேக்ஸ்வெல், விரேந்தர் சேவாக் போன்ற அதிரடி வீரர்கள் கை கொடுத்த காரணத்தால் நீண்ட நாட்களுக்கு பின் அபாரமாக செயல்பட்ட பஞ்சாப் அணி இறுதிப் போட்டி வரை சென்று அசத்திய போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. மேலும் இந்த 2014ம் ஆண்டுதான் பஞ்சாப் அணியின் ஒரு சிறந்த ஐபிஎல் தொடராக இதுநாள் வரை அமைந்துள்ளது. அதன் காரணமாக ஜார்ஜ் பெய்லியை நம்பிய அந்த அணி நிர்வாகத்துக்கு மீண்டும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது. ஏனெனில் அதற்கு முந்தைய சீசனில் பைனல் வரை சென்ற பஞ்சாப் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது.

Maxwell

7. டேவிட் மில்லர், முரளி விஜய் : 2016ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் தமிழகத்தின் முரளி விஜய் ஆகிய 2 கேப்டன்களை அடுத்தடுத்து மாற்றி பார்த்த போதிலும் அந்த அணியால் 8வது இடம் மட்டுமே பிடிக்க முடிந்தது.

8. கிளென் மேக்ஸ்வெல் : 2017இல் மீண்டும் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் செயல்பட்ட போதிலும் அந்த அணி 5வது இடத்தை மட்டுமே பிடித்தது.

ashwin 1

9. ரவிச்சந்திரன் அஷ்வின்: 2018ஆம் ஆண்டு சற்று புதிதாக யோசித்து அந்த அணி நிர்வாகம் தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டனாக நியமித்தது. ஆனால் அவர் தலைமையில் 7வது இடத்தை பிடித்த பஞ்சாப் 2019இல் 6வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

10. கேஎல் ராகுல்: அதை தொடர்ந்து கடைசியாக நட்சத்திர வீரர் கே எல் ராகுல் பஞ்சாப் அணிக்கு கடந்த 2 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு மலைபோல ரன்களை குவித்த போதிலும் அந்த அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.

இதையும் படிங்க : விராட் கோலி தனது 100வது டெஸ்ட்டில் செஞ்சுரி அடிச்சே ஆகனும். அதுவே எனது ஆசை – விருப்பத்தை தெரிவித்த ஜாம்பவான்

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் விதவிதமாக கேப்டன்களை மாற்றினாலும் இதுநாள் வரை அந்த அணிக்கு எந்த ஒரு கேப்டனாலும் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. குறிப்பாக டெல்லி கேபிட்டல்ஸ் போல பெயரை மாற்றி பார்த்தால் தங்கள் அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கையில் கடந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் என பெயரை மாற்றிய போதிலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

Advertisement