பஞ்சாப் அணியில் இருந்து நான் வெளியேற இதுவே காரணம். உண்மையை உடைத்த – கே.எல்.ராகுல்

Rahul
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். அதோடு கடைசி சில சீசன்களில் அவர் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு சீசனிலும் 500 ரன்களுக்கு மேல் அவர் பேட்ஸ்மேனாக குவித்தாலும் ஒரு கேப்டனாக அவரால் அணிக்கு வெற்றி தேடித் தர முடியவில்லை என்று கூறலாம். ஏனெனில் கடந்த சீசன்களில் அவர் கேப்டனாக இருந்த வரை பஞ்சாப் அணியால் பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை.

pbks

- Advertisement -

எனவே அந்த விரக்தியின் காரணமாகவே அவர் பஞ்சாப் அணியில் நீடிக்க விரும்பாமல் கடந்த ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் மெகா ஏலத்திற்கு தயாரானார். ஆனால் ஏலத்திற்கு முன்னதாகவே இந்த 15வது தொடருக்காக புதிய அணியாக இணைந்த லக்னோ அவரை முன்னதாகவே பெரிய தொகை கொடுத்து எடுத்து அவரை லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.

இப்படி தான் பஞ்சாப் அணியில் இருந்து வெளியேறியது குறித்தும் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது குறித்தும் கேஎல் ராகுல் தெளிவான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பஞ்சாப் அணியுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இணைந்து இருந்தேன். அதேபோன்று நல்ல ரன் குவிப்பையும் நான் வழங்கியுள்ளதாக நினைக்கிறேன்.

rrvspbks

ஆனால் தற்போது அங்கிருந்து நகர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தோன்றுகிறது. இந்த முடிவு கடினமான ஒன்றாக இருந்தாலும் நான் புதிய பயணத்திற்காக தயாராகி என்னால் இன்னும் ஏதாவது செய்ய முடியுமா என்பதை பரிசோதிப்பதற்காக தற்போது புதிய அணிக்காக விளையாட உள்ளேன். பஞ்சாப் அணியுடன் நான் மிகவும் அட்டாச் ஆகி இருந்ததால் அங்கிருந்து வெளியே வந்தது கடினம் என்றாலும் என்னுடைய புதிய பயணத்தை துவங்க ஆவலோடு காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தொடர்ந்து பஞ்சாப் அணிக்காக ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தாலும் ஒட்டுமொத்தமாக அந்த அணி பல தோல்விகளை தழுவியதால் ஏற்பட்ட விரக்தியில் தான் ராகுல் அந்த அணியிலிருந்து வெளியேறி புதிய பயணத்தை துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர்கள் – டாப் 10 வீரர்களின் பட்டியல்

அதே வேளையில் அவருடன் இணைந்து பஞ்சாப் அணியில் பயணித்த மாயங்க் அகர்வால் பஞ்சாப் அணி நேரடியாக தக்க வைக்கப்பட்டது மட்டுமின்றி இந்த 15ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது லக்னோ அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ராகுலுடன், ரவி பிஷ்னோய் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகிய இருவரையும் லக்னோ நேரடியாக தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement