ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த வீரர்கள் – டாப் 10 வீரர்களின் பட்டியல்

Rohith
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் விளையாடுவதால் 60 போட்டிகளுக்கு பதில் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பங்கேற்கின்றன.

ipl trophy

- Advertisement -

அதிக கோப்பைகளை வென்ற வீரர்கள்:
ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் இதுவரை 5 கோப்பைகளை வென்று அலமாரியில் அடுக்கி வைத்துள்ள நிலையில் பெங்களூர் போன்ற ஒரு சில அணிகள் இன்னும் கோப்பையை தொட முடியாமல் தவித்து வருகின்றன. அதேபோல் இந்த ஐபிஎல் கோப்பையை கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற டி20 கிரிக்கெட்டின் மகத்தான ஜாம்பவான்கள் தொட்டதே கிடையாது.

குறிப்பாக பெங்களூர் அணிக்காக ஆரம்பம் முதல் இப்போது வரை விளையாடி வரும் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி கடந்த 2016-ஆம் ஆண்டு 976 ரன்களை குவித்து அந்த அணியின் வெற்றிக்காக தனி ஒருவனாக போராடிய போதிலும் கோப்பையை வாங்க முடியவில்லை. இத்தனைக்கும் அவரின் கைகள் ஒரு ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட தகுதியான ஒன்று என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அப்படிப்பட்ட இந்த கடினமான ஐபிஎல் கோப்பையை நிறைய முறை வென்ற வீரர்களின் பட்டியல் பற்றி பார்ப்போம்.

Ipl

1. ரோஹித் சர்மா : ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு வளர்ந்துள்ளார். கடந்த 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஒரு கேப்டனாகவும் ஒரு வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கோப்பையை வென்ற அவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியிலும் இடம் பிடித்திருந்தார்.

- Advertisement -

இதன் வாயிலாக 6 கோப்பைகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். அவரை தவிர வேறு எந்த வீரரும் 6 சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது.

Rohith

2. கிரண் பொல்லார்ட்: ஆரம்ப காலம் முதல் இந்தக்காலம் வரை ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரண் பொல்லார்ட் இதுவரை அந்த அணி கோப்பைகளை வென்ற 5 வருடங்களிலும் முக்கிய இடம் பிடித்திருந்தார். இதன் வாயிலாக 5 கோப்பைகளை வென்றுள்ள அவர் இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

3. ஜஸ்பிரித் பும்ரா: வானத்தைப்போல படத்தில் வரும் டயலாக் போல கடந்த 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் முதல் முறையாக ஜஸ்பிரித் பும்ரா காலடி வைத்த நேரம் அந்த அணி அடுத்த 8 வருடங்களில் 5 கோப்பைகளை வென்றது. அந்த 5 சாம்பியன் பட்டம் வென்ற சீசன்களிலும் முக்கிய பங்காற்றிய ஜஸ்பிரித் பும்ரா 5 கோப்பைகள் வென்று இந்தப் பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

Bumrah

4. அம்பத்தி ராயுடு: கடந்த 2018-க்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் அம்பத்தி ராயுடு 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணியுடன் இணைந்து கோப்பையை வென்றுள்ளார். அதேபோல் 2013, 2015, 2017 ஆகிய சீசன்களில் மும்பை அணிக்காக 3 கோப்பைகளை வென்று இந்த பட்டியலில் 5 கோப்பைகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

5. ஆதித்யா தாரே: சில வீரர்கள் களத்தில் இறங்கி விளையாடா விட்டாலும் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் வகித்து நிறையக் ஐபிஎல் கோப்பைகளை வென்றார்கள். அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நீண்ட காலமாக இடம் பிடித்து வந்த ஆதித்யா தாரே 5 கோப்பைகளை வென்றுள்ளார்.

rayudu

6. எம்எஸ் தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திரம் எம்எஸ் தோனி இல்லாமல் அந்த அணி இதுவரை கோப்பை வென்றது கிடையாது. அதே போல் அவரும் சென்னை தவிர புனே அணிக்காக விளையாடிய போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு சென்னை அணியுடன் ரத்தமும் சதையுமாக கலந்துள்ள எம்எஸ் தோனி கேப்டனாகவும் வீரராகவும் 2010, 2011, 2018, 2021 என 4 கோப்பைகளை வென்று இந்தப் பட்டியலில் 3வது இடத்தை பிடிக்கிறார்.

6. சுரேஷ் ரெய்னா : சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற 4 கோப்பைகளிலும் முக்கிய பங்காற்றிய சுரேஷ் ரெய்னா அந்த அணி கேப்டன் தோனிக்கு நிகராக வலம் வந்தார். ஆனாலும் அந்த அணி நிர்வாகம் இந்த வருடம் அவரை தக்கவைக்காதது சென்னை அணி ரசிகர்களுக்கே மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

raina

7. ஹர்பஜன் சிங்: 2013, 2015, 2017 ஆகிய வருடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் வகித்து கோப்பையை வென்ற முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2018-ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் 4-வது முறையாக கோப்பையை வென்றார்.

8. லசித் மலிங்கா : இலங்கையின் ஜாம்பவான் லசித் மலிங்கா கடந்த 2009 – 2019 வரை தொடர்ந்து 10 வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த கால கட்டங்களில் 2013, 2015, 2017, 2019 என அந்த அணி வென்ற 4 வருடங்களில் முக்கிய பங்காற்றிய அவர் 4 கோப்பைகளை வென்று அசத்தினார்.

Malinga

9. ஹர்டிக் பாண்டியா: கடந்த 2015, 2017, 2019, 2020 ஆகிய வருடங்களில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய இடம் வகித்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா 4 கோப்பையை வென்றுள்ளார். இருப்பினும் அந்த அணி நிர்வாகம் அவரை தக்க வைக்காததால் இந்த வருடம் குஜராத் அணிக்கு கேப்டனாக விளையாடுகிறார்.

10. கர்ன் சர்மா: ஐபிஎல் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் கர்ன் சர்மா 4 கோப்பைகளை வென்றுள்ளது ஆச்சரியமான ஒன்றாகும். சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் இவர் பெஞ்சில் அமர்ந்திருந்தாலே போதும் அந்த அணி கோப்பையை வென்றுவிடும் என சமூக வலைதளங்களில் பெரும்பாலான ரசிகர்கள் பேசி வந்தார்கள்.

Pandya-1

அதன் காரணமாகவே இவரை வாங்குவதற்கு பெரும்பாலான அணிகள் பல கோடி ரூபாய்களுடன் ஏலத்தில் போட்டி போட்டன. ஏனெனில் இவர் கோப்பையை வென்ற நான்கு வருடங்களிலும் பெரும்பாலும் பெஞ்சில் தான் அமர்ந்திருந்தார். அந்த வகையில் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஹைதராபாத் மற்றும் மும்பை அணியில் இடம் வகித்து கோப்பையை வென்ற அவர் 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணியில் கோப்பையை வென்றுள்ளார்.

இதையும் படிங்க : ஒரு பவுலராக நீங்க இந்த குறையை சொன்னா. நீங்க கிரிக்கெட்டே ஆடக்கூடாது – சயீத் அஜ்மல் காட்டம்

இவர்களை தவிர ரவிந்திர ஜடேஜா, யூசுப் பதான், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் 3 கோப்பைகளையும் ஷேன் வாட்சன், கௌதம் கம்பீர், டு பிளேஸிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் 2 கோப்பைகளையும் வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement