ஒரு பவுலராக நீங்க இந்த குறையை சொன்னா. நீங்க கிரிக்கெட்டே ஆடக்கூடாது – சயீத் அஜ்மல் காட்டம்

Ajmal
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்று பயணத்திற்காக ஏற்கனவே பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்து விட்டது. அதனை தொடர்ந்து தற்போது 3-வது டெஸ்ட் போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

pak vs aus

- Advertisement -

இந்நிலையில் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும், கராச்சியில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்தது விமர்சகர்கள் இடையே பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற மைதானம் முற்றிலுமாக பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்தன.

அதுமட்டுமின்றி முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்து அந்த மைதானம் டெஸ்ட் விளையாடுவதற்கு சாதகமான மைதானம் இல்லை என்ற பேச்சும் எழுந்தது. அதோடு ஐசிசி-யும் ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட மைதானம் சராசரிக்கும் கீழான தன்மையுடன் இருந்ததாக கூறி ஒரு தரமிழப்பு புள்ளியையும் வழங்கியிருந்தது. அதோடு இனி வரும் போட்டிகளில் பேட்டிங் பவுலிங் இரண்டிற்குமே சாதகமான ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என்று குரல்கள் ஒலித்தன.

PAK

இந்நிலையில் இப்படி தொடர்ச்சியாக கிரிக்கெட் மைதானங்கள் மீது புகார் கொடுப்பவர்களை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சயீத் அஜ்மல் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்போதுமே ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் எந்த பிட்ச்சையும் குறை சொல்லக்கூடாது. உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் அங்கு நமது திறமையை நிரூபித்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

- Advertisement -

ஒரு பவுலராக நீங்கள் இருந்து பிட்ச்சை குறை சொல்வீர்கள் என்றால் நீங்கள் கிரிக்கெட் விளையாடக் கூடாது. ஏனெனில் எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு பொறுமை மிகவும் முக்கியம். முதலில் 8 முதல் 10 ஓவர்கள் பந்து வீசி பேட்ஸ்மேன்களுடன் மைன்ட் கேம் விளையாட வேண்டும். பின்னர் போட்டிக்கான திட்டங்களை அமைத்தால் விக்கெட்டுகள் கிடைக்கும்.

இதையும் படிங்க : குறைந்த பட்ஜெட்டில் 3 தரமான வெளிநாட்டு வீரர்கள் வாங்கியுள்ளோம், அடுத்து கோப்பை தான் – மகிழ்ச்சியில் பிளெமிங்

அதை தவிர்த்து பிட்ச் சரியில்லை என்றும், இதில் விளையாட முடியாது என்றும் விமர்சிப்பவர்களை பார்த்தால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்த மைதானமாக இருந்தாலும் அதன் தன்மையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் செயல்பட வேண்டும் என்றும் அவர் தனது காட்டமான கருத்தை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement