துச்சமாக பேசிய ஷாகிப்.. வங்கதேசத்துக்கு தோல்வியை பரிசாக கொடுத்து வெற்றியுடன் முடித்த ஜிம்பாப்வே

- Advertisement -

வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடின. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி கண்ட வங்கதேசம் ஆரம்பத்திலேயே கோப்பை வென்றது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பரதாய கடைசி போட்டி தாக்காவில் மே 12ஆம் தேதி நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 157/6 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் சாண்டோ 36, முகமதுல்லா 54, ஷாகிப் அல் ஹசன் 21, ஜாகிர் அலி 24* ரன்கள் எடுத்தனர். ஜிம்பாவே அணிக்கு அதிகபட்சமாக முஜரபாணி, பிரைன் பென்னெட் தலா 2 விக்கெட்கள் எடுத்து அசத்தினர்.

- Advertisement -

துச்சமான பேச்சு:
அதைத் தொடர்ந்து 158 ரன்களை துரத்திய ஜிம்பாப்பே அணிக்கு மருமணி 1 ரன்னில் ஷாகிப் அல் ஹசன் சுழலில் அவுட்டானார். இருப்பினும் எதிர்புறம் சிறப்பாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பிரைன் பெனட் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 70 (49) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்த கேப்டன் சிக்கந்தர் ராசா கடைசி வரை அவுட்டாகாமல் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 72* (46) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார்.

அதனால் 18.2 ஓவரிலேயே 158/2 ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. அதன் காரணமாக குறைந்தபட்சம் ஒய்ட் வாஸ் தோல்வியை தவிர்த்த ஜிம்பாப்வே கடைசி போட்டியில் வென்று இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது. மறுபுறம் 4 – 1 (5) என்ற கணக்கில் சொந்த மண்ணில் இத்தொடரை வங்கதேசம் வென்று அசத்தியது.

- Advertisement -

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக அல்லாமல் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக இத்தொடரில் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சாகிப் அல் துச்சமாக பேசினார். மேலும் தாக்கா பிரிமியர் லீக் தொடரை 50 ஓவர்களைக் கொண்ட தொடராக நடத்துவதில் எந்த பயனுமில்லை என்றும் அவர் வங்கதேச வாரியத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: தோல்வி கொடுத்த எதிரணியிடம் மணிகணக்கில் பேசிய ரோஹித்.. அப்படின்னா வாசிம் அக்ரம் சொன்னது உண்மை போலயே?

அந்த சூழ்நிலையில் இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் தோற்றாலும் கடைசி போட்டியில் வென்ற ஜிம்பாப்வே எங்களிடமும் கொஞ்சம் திறமை இருக்கிறது என்பதை காண்பித்து வங்கதேசத்துக்கு தக்க பதிலடி கொடுத்தது என்றே சொல்லலாம். எனவே கடந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த ஜிம்பாப்வேவை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Advertisement