குறைந்த பட்ஜெட்டில் 3 தரமான வெளிநாட்டு வீரர்கள் வாங்கியுள்ளோம், அடுத்து கோப்பை தான் – மகிழ்ச்சியில் பிளெமிங்

CSK-Auction
- Advertisement -

மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ள இந்த தொடரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்கின்றன.

IPL

- Advertisement -

இம்முறை இந்தியாவிலேயே நடைபெறும் இந்த தொடரின் பைனல் உட்பட மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளன. குறிப்பாக முதலில் நடைபெறும் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள் முழுவதும் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளது.

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்:
இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராக துவங்கியுள்ளன. குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்காக மற்ற அணிகளை காட்டிலும் கடந்த வாரத்திற்கு முன்பாகவே குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

csk 1

இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள அந்த அணி இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள போராட உள்ளது. இம்முறை சுரேஷ் ரெய்னா, பப் டு பிளேஸிஸ் போன்ற ஒருசில காலம் காலமாக விளையாடிய முதுகெலும்பு வீரர்களை அந்த அணி கோட்டை விட்டாலும் அதற்கு ஈடாக ஒரு சில நல்ல வீரர்களையும் வாங்கியுள்ளது.

- Advertisement -

குறைந்த பட்ஜெட்டில் 3 வீரர்கள்:
இந்நிலையில் சூரத் நகரில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அதன் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ஸ்டீபன் பிளமிங் இணைந்துள்ளார். தற்போது அணி வீரர்களின் வலைப்பயிற்சியை மேற்பார்வையிட்டு வரும் அவர் சமீபத்தில் நடந்த ஏலத்தில் சென்னை அணியின் செயல்பாடு பற்றி பேசியது பின்வருமாறு.”ஏலத்தின் முடிவில் அது எங்கள் திட்டத்தின்படி சென்றதால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே சமயம் ஒரு சில தரமான வீரர்களை நாங்கள் கோட்டை விட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும் அதற்கு ஈடாக ஒரு சில திறமை வாய்ந்த தரமான வீரர்களை வாங்கியுள்ளோம். மேலும் இந்த வருடம் அனுபவம் மற்றும் இளமை நிறைந்த அணியாக எங்கள் அணி உள்ளது”

CSK-Auction

“ஒருசில வீரர்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது நல்ல அம்சமாகும். அவர்கள் நிறைய நுணுக்கங்கள் தெரிந்த திறமையானவர்கள். கடந்த சில வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் டேவோன் கான்வே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் மிட்சேல் சான்ட்னர் எங்களின் ஒரு நட்சத்திரம். மேலும் ஆடம் மில்னே இருப்பதால் எங்களின் வேகப்பந்து சிறப்பாக மாறியுள்ளது. எனவே நல்ல நுணுக்கங்களும் திறமையும் உள்ள இந்த 3 வீரர்களும் எங்களிடம் உள்ளனர்” என கூறினார்.

அடுத்தது கோப்பை தான் இலக்கு:
கடந்த சீசன்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட டு பிளேஸிஸ், ஷார்துல் தாகூர் போன்ற வீரர்களை ஏலத்தின் போது கோட்டைவிட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று தெரிவித்த ஸ்டீபன் பிளமிங் அதற்கு ஈடாக 3 வெளிநாட்டு வீரர்களை குறைந்த விலையில் வாங்கியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறும் நியூசிலாந்தின் டேவோன் கான்வே 1 கோடி, ஆடம் மில்னே மற்றும் மிட்சேல் சட்னர் ஆகியோரை தலா 1.9 கோடிக்கு வாங்கிய சென்னை அணி நிர்வாகம் இந்த 3 தரமான வீரர்களை வெறும் 4.8 கோடி என்ற குறைந்த விலையில் வாங்கியதால் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிகிறது.

CSK

இப்போது மட்டுமல்ல பொதுவாகவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பல அணிகள் நட்சத்திர அந்தஸ்துள்ள ஒரு வெளிநாட்டு வீரருக்காக பல கோடி ரூபாய்களை செலவழித்து வாங்கினாலும் அவர்களை வைத்து வெற்றிகளை பெற முடிவதில்லை. மறுபுறம் வரலாற்றில் எப்போதுமே குறைந்த தொகைக்கு நல்ல வீரர்களை வாங்கி வெற்றியை ருசிக்கும் அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் அதே உத்தியைக் கையாண்டு குறைந்த விலையில் நல்ல தரமான வீரர்களை வாங்கியுள்ளது. எனவே அதே பாணியில் இந்த வருடமும் அனுபவம் வாய்ந்த கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட தரமான வீரர்களுடன் களமிறங்கி கோப்பையை நிச்சயமாக வாங்குவோம் என அதன் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement