டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் வரலாற்று சாதனை – விவரம் இதோ

Azam
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டி20 போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்த அயர்லாந்து அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்று கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி துவக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தற்போது இந்த தொடரானது தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பெற்ற வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மாபெரும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற பட்டியலில் உகாண்டாவின் கேப்டன் மசாபாவை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இதையும் படிங்க : ராஜஸ்தான் அணிக்காக விளையாடினாலும் சேப்பாக்கம் மைதானத்தில் சாதனையை தக்கவைத்த – ரவிச்சந்திரன் அஷ்வின்

தற்போது பாபர் அசாம் 45 வெற்றிக்குடன் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார், இந்த பட்டியலில் தோனி 41 வெற்றிகளுடனும், ரோகித் சர்மா 41 வெற்றிகளுடனும் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement