- Advertisement -
ஐ.பி.எல்

பஞ்சாப்பிடம் தோற்க இதான் காரணம்.. 5 கோப்பை ஜெய்ச்ச மும்பை எலிமினேட்டரில் ஜெய்க்கும்.. பாண்டியா பேட்டி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 69வது போட்டியில் பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது. மே 26 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை போராடி 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப்புக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன், விஜயகுமார் வைசக், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய பஞ்சாப் மிகச்சிறப்பாக பேட்டிங் செய்து 18.3 ஓவரிலேயே 187/3 ரன்களை எடுத்து தங்களுடைய 9வது வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக பிரியான்ஸ் ஆர்யா 62, ஜோஸ் இங்லிஷ் 73 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

அசந்தால் அடி:

அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. மறுபுறம் மிட்சேல் சான்ட்ன்ர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் 6வது தோல்வியை சந்தித்த மும்பை 4வது இடத்தைப் பிடித்து எலிமினேட்டரில் விளையாடத் தகுதி பெற்றது. இந்நிலையில் 5 கோப்பைகளை வென்ற தங்களை கொஞ்சம் அசந்தாலும் எதிரணிகள் தோற்கடித்து விடுவதாக மும்பை கேப்டன் ஹர்டிக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் 20 ரன்களை குறைவாக எடுத்தது தோல்வியைக் கொடுத்ததாக தெரிவிக்கும் அவர் எலிமினேட்டரில் சிறப்பாக விளையாடி மும்பை அணி கம்பேக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். இது பற்றி பாண்டியா பேசியது பின்வருமாறு. “பிட்ச் விளையாடிய விதத்தை வைத்து பார்க்கையில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம். இப்படி நடப்பது சகஜம். நல்ல கிரிக்கெட்டை விளையாடி வரும் நாங்கள் இன்று நன்றாக விளையாடவில்லை. அதுவே தோல்வியைக் கொடுத்தது”

- Advertisement -

எலிமினேட்டரில் வருவோம்:

“மும்பை 5 கோப்பைகளை வென்ற அணி என்பதால் எப்போதும் கடினம் இருக்கும். ஆக்சலேரேட்டரில் நீங்கள் கொஞ்சம் காலை எடுத்தாலும் மற்ற அணிகள் வெற்றிகளை எடுத்துச் சென்று விடும். இங்கே என்னுடைய மெசேஜ் எளிது. அதாவது இந்த சிறிய சரிவில் பாடத்தைக் கற்றுக்கொண்டு நாக் அவுட் போட்டியை நோக்கி முன்னேற வேண்டும். எங்களுடைய பேட்டிங் துறை இன்னும் 20 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: டபுள் 4க்கு 4 தோல்வி.. பிளே ஆஃப் சென்றும் உடையும் மும்பையின் 6வது கோப்பை? 2011 முதல் பரிதாப பலவீனம்

“கரண் சர்மாவை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தாதது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் அஸ்வனி குமாருக்கு ஆதரவு கொடுத்தோம். இன்னிங்ஸ்களுக்கு இடையே பிட்ச்சில் பெரிய மாற்றம் இருந்ததாக தெரியவில்லை. எங்களுடைய பௌலிங் தெளிவாக இல்லை. எதிரணி நன்றாக விளையாடினார்கள். எலிமினேட்டரில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும். பேட்டிங் குழுவில் சரியான டெம்ப்ளேட்டை கண்டறிய வேண்டும். அதிகம் பதற்றமடையாத எங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பது தெரியும். எலிமினேட்டரை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

- Advertisement -