ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 26ஆம் தேதி ஜெய்ப்பூரில் 69வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதனால் பிளே ஆஃப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் விளையாட பஞ்சாப் தகுதி பெற்றது. அப்போட்டியில் வென்றால் பஞ்சாப் நேரடியாக ஃபைனல் செல்லலாம்.
ஒருவேளை தோற்றாலும் எலிமினேட்டரில் வென்று வரும் அணியுடன் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடி வென்றால் மீண்டும் ஃபைனல் செல்லும் வாய்ப்பை பெறலாம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டமிக்க குவாலிஃபயர் 1 போட்டிக்கு 2014க்குப்பின் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப் தகுதி பெற்றது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மறுபுறம் மும்பை புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை மட்டுமே பிடித்தது.
இப்படி ஒரு பலவீனமா:
அதனால் பிளே ஆஃப் சுற்றில் மிகவும் ஆபத்தான எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதற்கு மட்டுமே மும்பை தகுதி பெற்றுள்ளது. அந்த போட்டியில் வென்றால் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடி மீண்டும் வெற்றி பெற்றால் ஃபைனலுக்குச் செல்லலாம். ஒருவேளை எலிமினேட்டரில் தோற்றால் அப்படியே வீட்டுக்கு செல்லலாம் என்ற நிலைமையில் மும்பை இருக்கிறது.
இங்கே முக்கியமான விஷயம் என்னவெனில் பிளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப், குஜராத் பெங்களூரு, அணிகளும் தகுதி பெற்றுள்ளன. ஆச்சரியப்படும் வகையில் இந்த வருடம் லீக் சுற்றில் அந்த 3 அணிகளுக்கு எதிராக விளையாடிய 4 போட்டிகளில் (குஜராத்துக்கு எதிராக 2 முறை) மும்பை 4 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த வருடம் மும்பை பதிவு செய்த 8 வெற்றிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறி அணிகளுக்கு எதிராக பெற்றவையாகும்.
6 கோப்பை கனவு உடைக்கிறதா:
இதிலிருந்தே அந்த அணியின் உண்மையான பலத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம். இது போக ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி மொத்தம் 5 முறை பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. 2011, 2012, 2014, 2023 ஆகிய வருடங்களை தொடர்ந்து நடப்பு சீசனில் மும்பை எலிமினேட்டர் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 11 வருடம் கழித்து குவாலிபயர் 1க்குள் போக இதான் காரணம்.. மும்பையை சாய்த்த பின் ஸ்ரேயாஸ் பேட்டி
ஆச்சரியப்படும் வகையில் இதற்கு முன் விளையாடிய 4 எலிமினேட்டர் போட்டிகளிலும் மும்பை தோல்விகளை சந்தித்து வெளியேறியுள்ளது. இதிலிருந்து எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி பெரிய பலவீனத்தைக் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது. அதனால் இம்முறை 6வது கோப்பையை வெல்லலாம் என்ற மும்பை ரசிகர்களின் கனவு உடைந்ததாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் வருங்காலத்தை கணிக்க முடியாது என்பதால் இம்முறை வென்று அந்த மோசமான வரலாற்றை மும்பை மாற்றுகிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



