காரணமே இல்லாம அவரை ட்ராப் பண்ணிங்கள்ல, அனுபவிங்க ! பஞ்சாப்பை அணியை விளாசிய ஹர்பஜன் சிங்

Harbhajan
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் தவிக்கிறது. இந்த வருடத்தின் முதல் ஒருசில போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்த அந்த அணி டாப் 4 இடங்களில் வெற்றிநடை போட்டு வந்த நிலையில் தனது கடைசி 2 போட்டிகளில் பெற்ற அடுத்தடுத்த தோல்விகளால் பின்னடைவை சந்தித்துள்ளது.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

- Advertisement -

பரிதாப பஞ்சாப்:
ப்ராபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற டெல்லிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணிக்கு காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய கேப்டன் மயங்க் அகர்வால் அதிரடியாக 24 (15) ரன்களை எடுத்த போதிலும் ஷிகர் தவான் 9 (10), லியம் லிவிங்ஸ்டன் 2 (3), ஜானி பேர்ஸ்டோ 9 (8) என அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். நடுவரிசையில் ஜிதேஷ் சர்மா அதிரடியாக 32 (23) ரன்களை எடுத்தாலும் அடுத்து வந்த சாருக்கான் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்கள்.

அதை தொடர்ந்து 116 என்ற சுலபமான இலக்கை துரத்திய டெல்லிக்கு தொடக்க வீரர்கள் பிரிதிவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் முதல் ஓவரில் இருந்தே பஞ்சாப்பை புரட்டி எடுத்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தோல்வியை உறுதி செய்தனர். இதில் பிரிதிவி ஷா 41 (20) ரன்களை எடுக்க மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாத வார்னர் 60* (30) ரன்களை எடுத்ததால் 10.3 ஓவர்களிலேயே 119/1 ரன்களை எடுத்த டெல்லி 57 பந்துகளை மீதம் வைத்து 9 விக்கெட் வித்தியாசத்திலான மிகப்பெரிய தோல்வியை பஞ்சாப்புக்கு பரிசளித்தது.

bairstow

பனுக்கா ராஜபக்சா எங்கே:
இப்படி பஞ்சாப் அணியின் படுமோசமான தோல்விக்கு முக்கிய பங்காற்றிய பேட்ஸ்மேன்களில் ஷிகர் தவான், லியம் லிவிங்ஸ்டன் போன்றவர்கள் கடந்த போட்டிகளில் ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார்கள். ஆனால் தொடர்ச்சியாக சொதப்பி வரும் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவின் ஆட்டம் பலரிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் அவர் முறையே 8, 12, 12, 9 என வெறும் 41 ரன்களை 10.25 என்ற மோசமான சராசரியில் எடுத்து வருகிறார்.

- Advertisement -

இதற்கு அவரின் இடத்தில் முதல் 3 போட்டிகளில் விளையாடிய இலங்கையைச் சேர்ந்த பனுக்கா ராஜபக்சா எவ்வளவோ பரவாயில்லை என்று பஞ்சாப் ரசிகர்கள் அலுத்துக் கொள்கின்றனர். இதேயே பஞ்சாபைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கும் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு வீரர் நல்ல பார்மில் இருக்கும்போது அவரை நீங்கள் நீக்கக்கூடாது. ஆனால் ஜானி பேர்ஸ்டோ மிகப்பெரிய ரன்கள் அடிப்பார் என்ற எண்ணத்தில் நீங்கள் அவரை (ராஜபக்சா) நீக்கினால் எதுவும் நடக்காது. எப்போதுமே ஒரு வீரர் மிகச் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பெஞ்சில் சீனியர் வீரர் அமர்ந்திருந்தால் கூட அணியின் நலன் கருதி அவருக்கே தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும்” என பஞ்சாப் அணி நிர்வாகத்தை விமர்சித்தார்.

Harbhajan

அத்துடன் சிறப்பாக தொடங்கினாலும் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்கும் பஞ்சாப் அதற்காக கவலைப்படாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆல் அவுட்டாகி விடுவது எப்போதும் வெற்றியை தராது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஷிகர் தவானை தவிர ஏனைய பஞ்சாப் வீரர்கள் சிக்ஸர்கள் மட்டுமே அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேட்டிங் செய்வதாக குற்றம் சாட்டிய அவர் டி20 கிரிக்கெட்டில் சிங்கிள்ஸ், டபுள்ஸ் ரன்களும் வெற்றிக்கு உதவும் என்பதை மறந்துவிடக்கூடாது எனக் கூறினார்.

- Advertisement -

மிரட்டலான ராஜபக்சா:
அவர் கூறும் இலங்கையைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேன் பனுக்கா ராஜபக்சா இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளில் 83 ரன்களை 230.56 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்தார். குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப்புக்கு அவர் 43 (22) ரன்களை அதிரடியாக எடுத்து வெற்றிக்கு உதவினார். குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெறும் 9 பந்தில் 31 ரன்களை தெறிக்கவிட்ட அவர் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

bhanuka Rajapaksa2

ஆனால் சென்னைக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 9 (5) ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டானார் என்ற காரணத்திற்காகவும் ஜானி பேர்ஸ்டோவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கழற்றிவிட்ட பஞ்சாப்புக்கு அதன்பின் தோல்விகள் பரிசாக கிடைத்ததில் எந்தவித ஆச்சரியமும் இல்லை என்று ஹர்பஜன்சிங் விளாசியுள்ளார்.

இதையும் படிங்க : ரிட்டைன் பண்ண வீரரையே அணியில் இருந்து நீக்கி அதிரடி காட்டிய கேப்டன் ஜடேஜா – என்ன பிளான்?

மேலும் “ஜானி பேர்ஸ்டோ ஃபார்முக்கு திரும்பவேண்டும் என்பதற்காக எவ்வளவு போட்டிகள் ராஜபக்சா வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டும்” என இதே காரணத்திற்காக பஞ்சாப் அணி நிர்வாகத்தை மற்றொரு முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் விமர்சித்துள்ளார்.

Advertisement