விராட் கோலியை ஃசெல்பிஷ்ன்னு சொன்னது சரி தான்.. பிரைன் லாரா இதை செய்வாரு.. ஹைடன் கருத்து

Matthew Hayden 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இதுவரை 13 போட்டிகளில் 661 ரன்கள் அடித்துள்ளார். அதனால் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் அதற்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும் அந்த ரன்களை கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்ததால் விராட் கோலி சுயநலத்துடன் சொந்த சாதனைக்காக விளையாடுவதாக விமர்சனம் காணப்பட்டன.

எனவே அவர் தான் ஆரம்பத்தில் பெங்களூரு பதிவு செய்த 6 தோல்விகளுக்கும் காரணம் என்றும் பேச்சுக்கள் வந்தன. அதே காரணத்தால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவரை தேர்வு செய்யக்கூடாது என்ற விமர்சனங்களும் வலம் வந்தன. இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டை பற்றி இப்படி விமர்சிப்பது சரி தான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் கூறியுள்ளார்.

- Advertisement -

லாரா மாதிரி:
ஏனெனில் விராட் கோலியை போன்ற வீரர்கள் இப்படி விமர்சிக்கும் போது தான் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இன்னும் சிறப்பாக விளையாடி பேட்டால் பதிலடி கொடுப்பார்கள் என்று ஹைடன் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரசிகர்களின் பார்வையில் ஸ்ட்ரைக் ரேட் சம்பந்தமாக விராட் கோலி விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்”

“டெக்னிக்கல் அளவில் அவர் மிகவும் சிறந்த கிரிக்கெட்டர். அதனாலேயே அவர் 3 விதமான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். அவர் மிகவும் ஃபிட்டான வீரர். அவரால் டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டிலும் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்று விளையாட முடிகிறது. இருப்பினும் மீடியாவில் விமர்சனங்கள் வரும் போது அவரைப் போன்ற சாம்பியன் வீரர்கள் இன்னும் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அது தான் விராட் கோலிக்கு இந்த சீசனில் நடந்தது”

- Advertisement -

“எனவே அது நெருப்பை தாண்டி அவர் சில முன்னேற்றங்களை சந்திப்பதற்கு தூண்டிய விதத்தை நான் விரும்புகிறேன். காயமடைந்த விளையாட்டு வீரர் மிகவும் ஆபத்தானவர். இது போன்ற சில சம்பவங்கள் என் நினைவில் இருக்கிறது. ஸ்டீவ் வாக் எப்போதும் தன்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசுவதை விரும்ப மாட்டார். கெவின் பீட்டர்சன் பேசுபவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க விரும்பினார்”

இதையும் படிங்க: இதெல்லாம் இந்தியாவுக்கு தெரிஞ்சா அனுமதிச்சுருக்க மாட்டாங்க.. இது பாகிஸ்தானுக்கு அவமானம்.. ரமீஸ் ராஜா கொதிப்பு

“பிரைன் லாராவிடம் நீங்கள் பேசாதீர்கள். அப்படி நீங்கள் பேசினால் அவர் உங்களை அடித்து நொறுக்குவார். எனவே இது போன்ற தரத்தை கொண்ட வீரர்களிடம் ஊசியை ஏற்றுவது போல் நீங்கள் பேசினால் அவர்கள் இன்னும் முன்னேற்றத்தை சந்திப்பார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து சமீபத்திய போட்டிகளில் விராட் கோலி மீண்டும் 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement