டெல்லிக்கு புறப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. கே.எல் ராகுல் செல்லவில்லை – புதிய கேப்டன் யார்?

KL-Rahul
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முக்கிய லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கும்.

அதன்காரணமாக இந்த போட்டி அவர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்த தொடரில் இதுவரை கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியானது 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இரண்டு போட்டிகளும் அவர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இவ்வேளையில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோசமான தோல்வியை தழுவிய பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் கோயங்கா அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலிடம் மைதானத்திலேயே கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்படி மைதானத்தில் கே.எல் ராகுலிடம் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பலரையும் அதிருப்தியடைய வைத்தது. மேலும் கே.எல் ராகுல் உரிமையாளருடன் நடைபெற்ற மோதலால் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி இந்த தொடரில் விளையாட மாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இருந்தன.

- Advertisement -

அதன்படி தற்போது கே.எல் ராகுல் லக்னோ அணியின் வீரர்களுடன் பயணிக்காமல் மும்பையில் தனது வீட்டிற்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக லக்னோ அணியின் வீரர்கள் தயாராகி டெல்லி சென்றுள்ள வேளையில் கே.எல் ராகுல் மட்டும் இதுவரை அணியில் இணையவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : அனுபவத்தை தாண்டி.. 42 வயதிலும் தோனி சிக்ஸர்களை அடிக்க இது தான் காரணம்.. ராயுடு பேட்டி

இதன் காரணமாக நாளைய போட்டியில் கே.எல் ராகுல் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே வேளையில் கே.எல் ராகுல் விளையாடவில்லை என்றால் அந்த அணியின் கேப்டனா நிக்கோலஸ் பூரான் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement