ரிட்டைன் பண்ண வீரரையே அணியில் இருந்து நீக்கி அதிரடி காட்டிய கேப்டன் ஜடேஜா – என்ன பிளான்?

Jadeja-1
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுவதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டிருந்தது. ஏற்கனவே இந்த தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள இவ்விரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும் சென்னை அணி 9-வது இடத்திலும், மும்பை அணி 10-வது இடத்திலும் உள்ளனர்.

cskvsmi

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் இரு பெரும் ஜாம்பவான் அணிகளாக பார்க்கப்படும் இவ்விரு அணிகளும் இந்த ஆண்டு பெரிய சரிவை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் எப்போதும் போல இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டி தற்போது ரசிகர்களின் பெரிய ஆரவாரத்திற்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பாக என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா அதிரடியான ஒரு மாற்றத்தை சென்னை அணியில் கொடுத்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். ஏனெனில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்ட நான்கு வீரர்களில் ஒருவரான மொயின் அலியை இந்தப்போட்டியில் நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக மிட்சல் சான்ட்னரை களமிறக்கியது அனைவரையும் வியக்கவைத்தது.

பொதுவாகவே டி20 கிரிக்கெட்டில் சென்னை அணிக்காக கடந்த இரண்டு வருடங்களாக பேட்டிங்கில் மூன்றாவது வீரராக களமிறங்கி அதிரடியில் பட்டையை கிளப்பும் மொயின் அலி பந்துவீச்சிலும் கை கொடுக்க கூடியவர். இதன் காரணமாக சென்னை அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட அவரை இந்த போட்டியில் இருந்து நீக்கியது ஒரு அதிரடி முடிவாக அமைந்தது.

- Advertisement -

மேலும் கடந்த போட்டியில் விளையாடிய க்றிஸ் ஜோர்டானுக்கு பதிலாக இந்த போட்டியில் பிரிடோரியஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அது தவிர்த்து சென்னை அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜடேஜா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ய தற்போது மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து முடித்துள்ளது.

இதையும் படிங்க : இது வேறயா ! கல்யாணத்துக்காக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் சிஎஸ்கே வெளிநாட்டு வீரர் – முழுவிவரம் இதோ

மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் அடித்துள்ளது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் குவித்தனர். அதைத் தொடர்ந்து தற்போது 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

Advertisement