142 ரன்ஸ்.. திவாடியா ஃபினிஷிங்.. 3 தமிழக வீரர்களுடன் பஞ்சாப்பை சாய்த்த குஜராத்.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

PBKS vs GT
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி முல்லான்பூரில் 37வது லீக் போட்டி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் சாம் கரண் – பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதில் பிரப்சிம்ரன் சிங் 35 (21) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ரிலீ ரோசவ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதே போல மறுபுறம் தடுமாறிய கேப்டன் சாம் கரண் 20 (19) ரன்களில் ரசித் கான் சுழலில் சிக்கினார். அடுத்ததாக வந்த அதிரடி வீரர் லியம் லிவிங்ஸ்டன் திணறலாக விளையாடி 6 ரன்களில் நூறு அகமது சுழலில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

குஜராத் வெற்றி:
அதனால் 78/4 எனத் தடுமாறிய பஞ்சாப் அணிக்கு துணை கேப்டன் ஜித்தேஷ் சர்மாவை 13 ரன்களில் போல்ட்டாக்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அடுத்த ஓவரில் சசாங் சிங்கை 8 (12) ரன்களில் காலி செய்தார். அதோடு நிற்காத அவர் அதிரடியாக விளையாடக்கூடிய இளம் வீரர் அசுடோஸ் சர்மாவையும் 3 (8) ரன்களில் அவுட்டாக்கி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அதனால் கடைசியில் ஹார்ப்ரீத் பிரார் 29 (12) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் பஞ்சாப் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

குஜராத் சார்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4, நூர் அகமது 2, மோஹித் சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 143 என்ற சுலபமான இலக்கை துரத்திய குஜராத்துக்கு ரிதிமான் சஹா 13 (11) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் கொஞ்சம் அதிரடியாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் 35 (29) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த சில ஓவரிலேயே அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 4 ரன்களில் லிவிங்ஸ்டன் சுழலில் கிளீன் போல்டானார். அதே போல கடைசி வரை அதிரடி காட்டாத சாய் சுதர்சன் 31 (34) ரன்களில் சாம் கரண் வேகத்தில் கிளீன் போல்ட்டானார். போதாக்குறைக்கு அடுத்து வந்த ஓமர்சாய் 10, சாருக்கான 8, ரசித் கான் 3 ரன்னில் அவுட்டானதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: சுனில் நரேன் இல்ல.. ஆட்டத்தை மாத்துனதே அவரு போட்ட ஒரு ஓவர் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

ஆனால் எதிர்புறம் களமிறங்கிய ராகுல் திவாட்டியா 36* (18) ரன்கள் அதிரடியாக எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 146/7 ரன்கள் எடுத்த குஜராத் 3 விக்கெட் எளிதாக வென்றது. அதனால் பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக லியான் லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் இப்போட்டியில் சாய் சுதர்சன், சாருக்கான், சாய் கிஷோர் ஆகிய 3 தமிழக வீரர்களுடன் களமிறங்கி அசத்திய குஜராத் 4வது வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் பஞ்சாப் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் திணறுகிறது.

Advertisement