ஐபிஎல் 2024 : லக்னோ அணியிலிருந்து வெளியேறிய கம்பீர்.. புதிய அணியில் ஆலோசகராக அறிவிப்பு

Gambhir LSg
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2024 சீசனை நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக வீரர்களை வாங்குவதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை விடுவித்து இறுதிக்கட்ட அணி பட்டியலை ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகுவதாக நட்சத்திர முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு புதிதாக துவங்கப்பட்ட போது ஆலோசகராக நியமிக்கப்பட்ட கம்பீர் 2022, 2023 ஆகிய அடுத்தடுத்த சீசன்களில் லக்னோ பிளே ஆஃப் சுற்று வரை செல்வதற்கு தம்மால் முடிந்த உதவிகளை பங்கை பின்புலத்தில் ஆற்றினார்.

- Advertisement -

கம்பீர் அறிவிப்பு:
இருப்பினும் அடுத்தடுத்த சீசன்களில் ஃபைனலுக்கு கூட தகுதி பெற தவறியதால் தங்களுடைய அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்களை செய்ய விரும்பும் லக்னோ அணி நிர்வாகம் ஏற்கனவே தலைமை பயிற்சியாளர் ஆண்ட்டி ப்ளவரை விடுவித்தது. அந்த வரிசையில் தற்போது லக்னோ அணியிலிருந்து வெளியேறியுள்ள கௌதம் கம்பீர் அப்படியே தம்முடைய பழைய அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 2024 முதல் ஆலோசகராக செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

சொல்லப்போனால் 2012, 2014 ஆகிய வருடங்களில் கௌதம் கம்பீர் தலைமையில் அபாரமாக விளையாடிய கொல்கத்தா 2 கோப்பைகளை வென்று சாதனை படைத்தது. ஆனால் அவர் ஓய்வு பெற்ற பின் சுமார் 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அந்த அணியால் அடுத்த கோப்பையை வெல்ல முடியாமல் இருப்பது கொல்கத்தா ரசிகர்களுக்கு ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் தங்களுக்கு 2 கோப்பைகளை வென்று கொடுத்த கம்பீர் தற்போது ஆலோசகராக செயல்பட உள்ளது கொல்கத்தா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கொல்கத்தா அணியில் மீண்டும் இணைவது மகிழ்ச்சியை கொடுப்பதாக கம்பீர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பொதுவாக நான் உணர்ச்சி வசப்படக்கூடிய நபரல்ல. ஆனால் இது வித்தியாசமானது. ஏனெனில் இங்கே தான் அனைத்தும் துவங்கியது”

இதையும் படிங்க: இந்தியா – ஆஸி முதல் டி20 நடக்கும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“இன்று மீண்டும் கொல்கத்தா அணிக்கு மட்டும் வரவில்லை. மகிழ்ச்சி நிறைந்த கொல்கத்தா நகரத்திற்கும் நான் திரும்பி வருகிறேன். வெற்றியின் பசி இன்னும் எனக்குள் இருக்கிறது. நான் நம்பர் 23, அமி கேகேஆர்” என்று பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தங்களுடைய முன்னாள் கேப்டன் மீண்டும் ஆலோசகராக செயல்பட வர உள்ளதை கொல்கத்தா அணியின் துணை உரிமையாளர் மற்றும் பாலிவுட் நடிகர் சாருக்கான், தலைமை நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் ஆகியோரும் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement