இந்தியா – ஆஸி முதல் டி20 நடக்கும் விசாகப்பட்டினம் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Visakhapatnam Stadium
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் ஆஸ்திரேலியாவிடம் ஃபைனலில் கோப்பையைக் கோட்டை விட்ட இந்தியா அடுத்ததாக மீண்டும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் படியாக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு சூரியகுமார் யாதவ் தலைமையில் முழுவதுமாக இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

மறுபுறம் மேத்தியூ வேட் தலைமையில் கிளன் மேக்ஸ்வெல் போன்ற அதிரடியான வீரர்களை கொண்டுள்ள ஆஸ்திரேலியா மீண்டும் இந்தியாவை தெறிக்க விடுவதற்கு தயாராகியுள்ளது. அந்த சவாலை இளம் வீரர்களை கொண்ட இந்தியா சமாளித்து வெற்றி பெறுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சொல்லப்போனால் நாக் அவுட்டில் மட்டுமே சொதப்பும் இந்தியா இருதரப்பு தொடரில் மிரட்டும் என்பதால் இளம் வீரர்களை வைத்து ஆஸ்திரேலியாவை தோற்கடிக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

விசாகப்பட்டினம் மைதானம்:
அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரில் இருக்கும் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2003இல் தோற்றுவிக்கப்பட்டு 25000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இந்த மைதானத்தில் 2016 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. அதில் இங்கு இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது. அந்த 1 தோல்வி 2019இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வந்ததாகும். இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (57) அடித்த வீரராக ருதுராஜ் கைக்வாட் முதலிடத்தில் இருக்கிறார். அதே போல அதிக விக்கெட்கள் (4) மற்றும் சிறந்த பவுலிங்கை (4/8) பதிவு செய்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் ஜொலிக்கிறார். இங்கு அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்த அணி இந்தியா 179/5, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2022

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 23ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் லேசான மேகமூட்டத்துடன் மழை பெய்வதற்கு 20% மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
விசாகப்பட்டினம் மைதானம் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமானதாக அறியப்படுகிறது. அதற்கு நிகராக இங்குள்ள பிட்ச்சில் குறைவான அளவில் (லோ) பவுன்ஸ் இருந்து வருவதால் ஸ்பின்னர்களும் அதிக ஆதிக்கத்தை செலுத்து வருகின்றனர். அதே சமயம் இப்போட்டி இரவு நேரத்தில் சற்று மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழ்நிலையில் நடைபெறும் எதிர்பார்க்கப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை ஸ்விங் செய்து சவாலை கொடுப்பார்கள்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய டி20 தொடரில் அசத்துமா இளம் இந்திய படை.. அலசல், வரலாற்று புள்ளிவிவரங்கள்

அது போக இரவு நேரத்தில் இப்போட்டியில் பனியின் தாக்கம் இருக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம். இங்கு இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 119 ரன்களாகும். மேலும் இங்கு நடைபெற்ற 3 போட்டிகளில் 2 முறை சேசிங் செய்த அணிகள் வென்றது. எனவே பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement