ஆஸ்திரேலிய டி20 தொடரில் அசத்துமா இளம் இந்திய படை.. அலசல், வரலாற்று புள்ளிவிவரங்கள்

IND vs AUS 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் பயணத்தின் முதல் படியாக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே சூரியகுமார் தலைமையில் விளையாடும் இத்தொடரில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், இஷான் கிசான் போன்ற இளம் வீரர்கள் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு போராட தயாராக இருக்கின்றனர். அதே போல வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் போன்ற சீனியர்களுடன் இளம் வீரர் திலக் வர்மாவும் ஆல் ரவுண்டராக அசத்துவார் என்று நம்பலாம்.

- Advertisement -

இந்தியா வெல்லுமா:
அதே போல சிவம் துபே நீண்ட வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் ஆல் ரவுண்டராக தாய்நாட்டுக்கு விளையாட காத்திருக்கும் நிலையில் ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராகவும் ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷிதீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பவுலர்களாகவும் வெற்றிக்கு போராட உள்ளனர். மறுபுறம் ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ வேட் தலைமையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜோஷ் இங்லிஷ் போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கின்றனர்.

எனவே உலகக்கோப்பையை வென்ற புத்துணர்ச்சியுடன் கண்டிப்பாக தொடரில் இந்தியாவை தோற்கடித்து வெற்றி பெற அந்த அணி தயாராகியுள்ளது. ஆனால் உலகக்கோப்பை நாக் அவுட்டில் மட்டுமே பூனையாக செயல்படக்கூடிய இந்தியா இருதரப்பு தொடரில் புலியாக பாயும் என்பதால் இத்தொடரில் வெல்லும் என்று நம்பலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரம்:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை மொத்தம் 26 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 15 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. மேலும் இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் இவ்விரு அணிகள் 10 போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் இந்தியா 6 வெற்றிகளையும் ஆஸ்திரேலியா 4 வெற்றிகளையும் பெற்றுள்ளது. அத்துடன் மொத்தமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 10 இருதரப்பு டி20 தொடர்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 5 தொடர்களையும் ஆஸ்திரேலியா 3 தொடர்களையும் வென்றது. 2 தொடர்கள் சமனில் முடிந்தது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய டி20 தொடரில் அசத்துமா இளம் இந்திய படை.. அலசல், வரலாற்று புள்ளிவிவரங்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த டாப் 3 இந்திய வீரர்களாக விராட் கோலி (794), ரோஹித் சர்மா (392), ஷிகர் தவான் (347) திகழ்கின்றனர். அதே போல அதிக விக்கெட்களை எடுத்த டாப் 3 இந்திய பவுலர்களாக ஜஸ்பிரித் பும்ரா (16) ரவிச்சந்திரன் அஸ்வின் (10) மற்றும் புவனேஸ்வர் குமார் (9) உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச டி20 ஸ்கோர் : 208 ரன்களாகும்.

Advertisement