சச்சினே 6 டைம் வெய்ட் பண்ணாரு.. இதை விட பெரிய வெற்றி அவருக்கு காத்திருக்கு.. சஞ்சய் பங்கர் நம்பிக்கை

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து கோப்பையை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு எளிதில் மறக்க முடியாத சோகத்தை கொடுத்தது. ஏனெனில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனலில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி 10 தொடர் வெற்றிகளை பெற்றது.

இருப்பினும் மாபெரும் இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்து 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிடும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது. இந்த தோல்வியால் 36 வயதை கடந்த கேப்டன் ரோஹித் சர்மா அபாரமாக செயல்பட்டும் கடைசி வரை தம்முடைய கேரியரில் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் விடை பெற உள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

கடவுளின் சோதனை:
அவரை விட 765 ரன்கள் விளாசி உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சச்சின் உலக சாதனையை உடைத்து ஃபைனலில் 54 ரன்கள் எடுத்தும் கோப்பையை தொட முடியாமல் விராட் கோலி கலங்கிய கண்களுடன் சென்றது ரசிகர்களை சோகமடைய வைத்தது. சொல்லப்போனால் 2014, 2016 டி20 உலகக் கோப்பைகளை தொடர்ந்து 2023 உலகக்கோப்பை தொடரிலும் அவர் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் நாக் அவுட்டில் இந்தியா தோற்றதால் கோப்பையை தொட முடியாமல் கடந்த 10 வருடங்களாக சோகத்தை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் தரமான விராட் கோலியை கடவுள் அதிகமாக சோதித்து விட்டதாக முன்னாள் இந்திய பயிற்சியளர் மற்றும் வீரர் சஞ்சய் பங்கர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் சச்சினே 6 உலகக்கோப்பைகள் வெல்வதற்கு காத்திருந்ததாக தெரிவிக்கும் அவர் விராட் கோலிக்கு 2027 உலகக்கோப்பை போன்ற பெரிய வெற்றி காத்திருப்பதாக நம்பிக்கை தெரிவித்து பேசியது பின்வருமாறு. “விராட் கோலி அபாரமாக செயல்படுவதற்கு கடவுள் அவரை ஆசிர்வதித்துள்ளார். இன்னும் ஏதோ ஒரு ஸ்பெஷல் அவரிடம் இருக்கிறது”

- Advertisement -

இதையும் படிங்க: விராட் கோலிக்கு பரிசாக வழங்கிய தனது ஜெர்சியில் சச்சின் என்ன எழுதித்தந்துள்ளார் தெரியுமா? – விவரம் இதோ

“சொல்லப்போனால் சச்சின் டெண்டுல்கர் கூட தன்னுடைய முதல் கோப்பை வெல்வதற்கு 6 உலகக் கோப்பைகள் காத்திருந்தார். பொதுவாக கடவுள் சிறந்தவர்களை சோதிப்பார். ஒருவேளை விதி அவரை அடுத்த உலகக்கோப்பையில் விளையாட வைக்கலாம். எனவே அவர் அடுத்த உலகக்கோப்பையில் விளையாடி தங்கப் பதக்கத்தை வெல்வார் என நம்புவோம்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி தற்போது 35 வயதை தொட்டாலும் அபாரமான ஃபிட்னஸ் கடைபிடிப்பதால் 2027 உலகக் கோப்பையில் 39 வயதில் விளையாடி வெல்வதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement