விராட் கோலிக்கு பரிசாக வழங்கிய தனது ஜெர்சியில் சச்சின் என்ன எழுதித்தந்துள்ளார் தெரியுமா? – விவரம் இதோ

Sachin-and-Virat
- Advertisement -

கடந்த நவம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பங்கேற்று விளையாடினர். அந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு பரிசு ஒன்றினை வழங்கி இருந்தார்.

அந்த வகையில் அந்த இறுதிப்போட்டிக்கு முன்னதாக நேரடியாக மைதானத்திற்கு சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு பரிசினை வழங்கியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு சச்சின் டெண்டுல்கர் கடைசியாக விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பயனப்டுத்திய ஜெர்சியை தான் விராட் கோலிக்கு நினைவு பரிசாக வழங்கி உள்ளார்.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியின் போது சச்சினின் 49 ஒருநாள் சதங்கள் சாதனையை கடந்த விராத் கோலி ஒருநாள் போட்டிகளில் தனது 50-ஆவது சதத்தினை அடித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.

அவரது இந்த சாதனையை பாராட்டும் விதமாகவே விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் இந்த பரிசினை வழங்கியிருந்தார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் அப்படி கொடுத்த அந்த ஜெர்சியில் அவருடைய கையொப்பம் மட்டுமின்றி சில விடயங்களையும் சச்சின் எழுதியுள்ளார். அந்த வகையில் அவர் அந்த ஜெர்சியில் என்ன எழுதி இருக்கிறார்? என்று பார்க்கையில் :

- Advertisement -

“விராத், யு மேட் அஸ் ப்ரவுட்” அதாவது “நீங்கள் எங்களை பெருமை அடைய வைத்துள்ளீர்கள்” என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டு அந்த ஜெர்சியை விராட் கோலிக்கு வழங்கியுள்ளார். மேலும் சிறிய கடிதத்தில் தனிப்பட்ட வகையில் சில வாழ்த்துக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : என்ன செலக்ட் பண்ணலனாலும் பரவாயில்ல.. உலககோப்பைக்கு முன்னதாகவே முக்கிய முடிவை கையிலெடுத்த – ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் சச்சினின் பல சாதனைகளை அடுத்தடுத்து முறியடித்து வரும் விராட் கோலி தற்போது 80 சதங்களை அடித்திருக்கும் வேளையில் நிச்சயம் அவரது கரியர் முடிவதற்குள் விராட் கோலி அந்த 100 சதங்கள் சாதனையும் தகர்ப்பார் என்று பலராலும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement