என்ன செலக்ட் பண்ணலனாலும் பரவாயில்ல.. உலககோப்பைக்கு முன்னதாகவே முக்கிய முடிவை கையிலெடுத்த – ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு சென்றது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காத அணியாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி மீண்டும் ஒருமுறை கோப்பையை தவறவிட்டு ஏமாற்றம் அளித்தது.

உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின்னர் இந்திய வீரர்களும், ரசிகர்களும் மனமுடைந்து போயிருக்கும் இவ்வேளையில் அடுத்ததாக இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் விரைவில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டம் குறித்தும் பேச இருக்கிறார்கள். எனவே ரோகித் சர்மாவின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்தும் அவரது கேப்டன்சி குறித்தும் இந்த மீட்டிங்கில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

ஏனெனில் அடுத்த முறை 2027-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அந்த தொடரில் ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்றால் 40 வயதை நெருங்கி இருப்பார். ஆனால் அது சாத்தியமில்லை என்பதின் காரணமாக 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரை அவர் கேப்டனாக நீடிக்கலாம் என்று தெரிகிறது.

- Advertisement -

அப்படி இந்த இரண்டு ஆண்டிற்குள் அடுத்த தலைமுறைக்கு கேப்டனை உருவாக்கிவிட்டு அவர் விடைபெறுவார் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவே ரோகித் சர்மா ஒரு முக்கிய முடிவை ஏற்கனவே முன்கூட்டியே எடுத்து விட்டார் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாகவே தேர்வுக்குழுவினரிடம் சென்று ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க : ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

இனிமேல் நான் டி20 அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை. எனக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளியுங்கள். அடுத்த டி20 உலக கோப்பை தொடருக்காக அவர்களை தயார்படுத்துங்கள் என்பது போல குறிப்பிட்டு டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பினை துறந்துள்ளார். ஏனெனில் தற்போது 36 வயதாகும் அவர் இனியும் அந்த வடிவத்தில் தொடர்வதைவிட இளம் வீரர்கள் அந்த இடத்தில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று அவர் முன்கூட்டியே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Advertisement